- Home
- உடல்நலம்
- High BP and Sugar : பிபி, சுகர் ரெண்டும் ஒரே நேரத்துல குறையும்; வெறும் வயித்துல இதுல '1' சாப்பிடுங்க
High BP and Sugar : பிபி, சுகர் ரெண்டும் ஒரே நேரத்துல குறையும்; வெறும் வயித்துல இதுல '1' சாப்பிடுங்க
உங்களுக்கு பிபி, சுகர் இருந்தால் இரண்டுமே ஒரே நேரத்தில் குறைய இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில மூலிகை பொருட்களில் ஏதேனும் ஒன்றை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். கொஞ்ச நாளிலேயே நார்மலுக்கு வந்துவிடும்.

சுகர், பிபி கட்டுக்குள் வைக்க
இந்த காலத்துல சர்க்கரை நோய் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இது வந்தாலே வரிசையாக ஒவ்வொரு பிரச்சனையும் கூடவே வந்து கொண்டே இருக்கும். சர்க்கரை நோய் ஒரே நாளில் வரும் நோய் அல்ல. நீண்ட காலமாகவே இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் தான் இந்த விளைவு ஏற்படும். இது போல தான் உயரத்தை அழுத்த பிரச்சனையாலும் பலரும் அவதிப்படுகிறார்கள். நீங்களும் இது இரண்டு பிரச்சனையால் படாதப்பாடுபடுகிறீர்களா? இவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த சில உணவுகள் உள்ளன தெரியுமா? அந்த மூலிகை உணவுகளை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுகர், பிபி கட்டுக்குள் வந்துடும். அந்த உணவுகளின் பட்டியல் இங்கே.
பெரிய நெல்லிக்காய் :
இது நம்ம ஊரிலேயே எளிதாக கிடைக்கும் ஒரு அருமையான உணவுப் பொருள். பிபி மற்றும் சுகரை குறைக்க தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டலாம் அல்லது ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெம்ன்ட்கள் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்க பெரிதும் உதவுகிறது இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் இதை சாப்பிடும்போது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவை இரண்டும் தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
வெந்தயம் :
வெந்தயம் எல்லார் வீட்டு சமையலறையில் இருக்கும் முக்கியமான மசாலா பொருள். இது ரத்த சர்க்கரை அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக கலக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் பிபி மற்றும் சுகர் குறையும்.
ஆளி விதைகள் :
ஆளி விதையில் நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதை ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீர்படுத்த உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆளி விதை பொடி கலந்தோ அல்லது ஸ்மூதிகளில் கலந்தோ குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு :
லவங்கப்பட்டை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் தடுக்க உதவுவதாக சமீபத்தில் வந்த ஆய்வுகள் சொல்லுகின்றன. அதுபோல பிளாக் பெப்பர் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதற்கு உதவி செய்கின்றது. இவை இரண்டுமே ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதற்கு ஒரு கிளாஸ் சூடான நீரில் அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு பொடி சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இந்த நீரை குடித்து வந்தால் பிபி மற்றும் சுகர் குறையும்.
மஞ்சள் மற்றும் எலுமிச்சை :
மஞ்சள் ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் இரண்டையுமே கட்டுக்குள் வைக்க வேலை செய்யும். மஞ்சளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து எடுத்துக் கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதற்கு ஒரு கிளாஸ் மஞ்சள் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பிபி மற்றும் சுகர் இவை இரண்டும் சீராக இருக்கும்.
மாதுளை ஜூஸ் :
மாதுளையில் ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். தினமும் வெறும் வயிற்றில் மாதுளை ஜூசை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.