உயரத்துக்கு ஏத்த எடை தான் ஆரோக்கியம்!! உடனே இதை கண்டுபிடிங்க!!
உங்களது உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப சரியான எடை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

How Much Should Be Weight According To Height And Age : ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உடல் எடையுடன் இருப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப நம்முடைய சரியான எடை என்னவாக இருக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கு கேள்வி எழுகிறது. ஆனால் உயரத்திற்கு ஏற்ப எடைக்கு என நிலையான ஏதுமில்லை. நம்முடைய வாழ்க்கை முறை உடலமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளை பொறுத்துதான் நம் உடல் எடை தீர்மானிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைங்க ஒவ்வொரு வயதிலும் எடை, உயரம் எவ்வளவு இருக்கனும் தெரியுமா?
Ideal Weight Ranges Based on Height
நமது சரியான எடை என்னவாக இருக்க வேண்டும் என்று நாம் அறிந்தால் அதை பராமரிக்கவும், உடல் பருமனை தவிர்க்கவும் முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நாம் இதை செய்ய தவற விட்டால் பல நோய்களுக்கு பலியாவோம். இத்தகைய சூழ்நிலையில், பலருக்கும் அவர்களின் உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ப சரியான எடை என்னவாக இருக்க வேண்டும் என்று தெரியாது. மேலும் சரியான எடையானது வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப நபருக்கு நபர் வேறுபடும். எனவே வயது மற்றும் வயதிற்கு ஏற்ப ஒருவருது எடை என்னவாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் எடை குறையனுமா? நீங்க பின்பற்ற வேண்டிய டயட் ப்ளான் இதோ!!
Body Mass Index (BMI)
உடல் நிறை குறியீட்டெண் (BMI) முறை;
Body Mass Index (BMI) உதவி மூலம் தான் உயிரினத்திற்கு ஏற்ப எடையை கணக்கிடுகிறோம். இன்னும் சொல்ல போனால், இதன் மூலம் மட்டுமே நம்மில் பெரும்பாலானவரின் எடை குறைவாக இருக்கிறதா அல்லது அதிகமா என்பதை அறிய முடியும். அதாவது நமது BMI 18.5க்கும் குறைவாக இருந்தால் நாம் எடை குறைவாக இருக்கிறோம் என்று அர்த்தம். அதுவே 18.5 முதல் 24.9 வரையிலானது BMI சரியானதாக கருதப்படுகிறது. மேலும் 25 முதல் 29.9 வரை BMI உள்ளவர்கள் அதிக எடை கொண்டவர்கள் என்றும், 30 மேல் BMI இருந்தால் உடல் பருமன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மக்கள் தங்களது வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் வயது, பாலினம், உயரம் ஆகியவற்றை பொறுத்து எடையானது நபருக்கு நபர் மாறுபடும். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
Ideal Weight According to Height
உயரத்திற்கு ஏற்ப எடை விவரம்:
உயரம் 4 அடி 10 அங்குலம் - 41 முதல் 52 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி - 44 முதல் 55.7 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி 2 அங்குலம் - 49 முதல் 63 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி 4 அங்குலம் - 49 முதல் 63 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி 6 அங்குலம் - 53 முதல் 67 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி 8 அங்குலம் - 56 முதல் 71 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 5 அடி 10 அங்குலம் - 59 முதல் 75 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
உயரம் 6 அடி - 63 முதல் 80 கிலோ வரை எடை இருக்க வேண்டும்.
Ideal Weight According to Age
வயதிற்கு ஏற்ப எடை விபரம்:
ஆண்கள் :
12-14 வயது வரை உள்ளவர்கள் எடை 32-38 கிலோ இருக்க வேண்டும்.
15-20 வயது வரை உள்ளவர்கள் எடை 40-50 கிலோ இருக்க வேண்டும்.
21-30 வயது வரை உள்ளவர்கள் எடை 60-70 கிலோ இருக்க வேண்டும்.
31-40 வயது வரை உள்ளவர்கள் எடை 59-75 கிலோ இருக்க வேண்டும்.
41-69 வயது வரை உள்ளவர்கள் எடை 58-70 கிலோ இருக்க வேண்டும்.
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எடை 55-68 கிலோ இருக்க வேண்டும்.
Ideal Weight According to Age
பெண்கள் :
12-14 வயது வரை உள்ளவர்கள் எடை 32-36 கிலோ இருக்க வேண்டும்.
15-20 வயது வரை உள்ளவர்கள் எடை 45 கிலோ இருக்க வேண்டும்.
21-30 வயது வரை உள்ளவர்கள் எடை 50-60 கிலோ இருக்க வேண்டும்.
31-40 வயது வரை உள்ளவர்கள் எடை 60-65 கிலோ இருக்க வேண்டும்.
41-60 வயது வரை உள்ளவர்கள் எடை 59-63 கிலோ இருக்க வேண்டும்.