- Home
- உடல்நலம்
- Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!
உணவில் அதிகமாக தக்காளி சேர்த்தால் எந்த மாதிரியான உடல்நல பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Side Effects of Tomatoes
தக்காளியை குழம்பு, சட்னி, சூப், சாலட், சாஸ் என பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இதில் வைட்டமின் சி, ஏ, லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆனால், தக்காளி அதிகம் சாப்பிட்டால் சில உடல்நலப் பிரச்சனைகள் வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
வாயுத் தொல்லை
தக்காளியில் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகம். இதை அதிகம் சாப்பிடுவதால், நெஞ்செரிச்சல், அசிடிட்டி, அஜீரணம் போன்ற இரைப்பை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அல்சர் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் தக்காளியை அளவோடு சாப்பிட வேண்டும்.
மூட்டு வலி
தக்காளியில் உள்ள சோலனின் என்ற பொருள், உடலில் அதிகமாக சேரும்போது மூட்டு மற்றும் தசை வலிகளை அதிகரிக்கும். குறிப்பாக ஆர்த்ரைடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி அதிகம் சாப்பிட்டால் வலி அதிகமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக பிரச்சனை
தக்காளியை அதிகம் சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிகம். சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு அதிக பொட்டாசியம் ஆபத்தானது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
சரும பிரச்சனைகள்
தக்காளி சருமத்திற்கு நல்லது என்றாலும், சிலருக்கு இதில் உள்ள ஹிஸ்டமைன் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் தடிப்புகள், அரிப்பு, மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பல் எனாமல் பாதிப்பு
தக்காளி அதிகம் சாப்பிடுவதால் பல் எனாமல் சேதமடையும். தக்காளியின் அமிலத்தன்மை பற்களின் பாதுகாப்பு அடுக்கை பலவீனப்படுத்துகிறது. இதனால் சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும்போது பல் கூச்சம் ஏற்படும்.
மற்ற காய்கறிகளுடன் சேர்த்து...
நிபுணர்களின் கூற்றுப்படி, தக்காளியை முழுமையாக தவிர்க்க தேவையில்லை. ஆனால் சரியான அளவு முக்கியம். மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் அதன் அமிலத்தன்மை குறையும்.

