டீ குடிக்குறப்ப சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கா? அப்ப இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க!!
டீ மற்றும் சிகரெட்டை ஒன்றாக குடிப்பீர்களா? அப்படியானால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில், அது உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.

Health Risks of Drinking Tea and Smoking Cigarettes Together : பெரும்பாலும் டீக்கடையில் நிறைய கூட்டம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர் பிஸ்கட் செய்து சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ டீயுடன் சிகரெட் குடிக்க விரும்புவார்கள். டீயுடன் சிகரெட் சேர்த்து குடிப்பது புத்துணர்ச்சி கிடைப்பதாக நம்புகிறார்கள். நீங்களும் டீ குடிச்சுக்கிட்டே சிகரெட் புகைப்பிடிக்கிறீங்களா? ஆனால் இந்த கலவி எனது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
Smoking and tea consumption
டீ மற்றும் சிகரெட் இரண்டும் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்திகின்றன. மேலும் அவற்றை ஒன்றாக உட்கொள்வது கடுமையான உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், பதட்டத்தை குறிக்க பலர் டீ மற்றும் சிகரட்டை ஒன்றாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இரண்டு கலவையானது உடலுக்கு ஏற்படுத்தும் சேதத்தின் அளவை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: புகைபிடிக்கும் பழக்கம்.. 40 வயதிற்குள் அதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வெளியான ஆய்வின் முடிவு!
Smoking and tea consumption
இது குறித்து 2023 ஆம் ஆண்டு அன்னல்ஸ் ஆப் இன்டர்னல் மெடிசின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சூடான டீ குடிப்பது உணவு குழாய் செல்களை சேதப்படுத்தும் என்றும், டீயுடன் புகை பிடிப்பது ஆபத்தை மேலும் இரட்டிப்பாகிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. காலப்போக்கில் இந்த பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: வெயில் காலத்துல கூட 'டீ' இல்லாம இருக்க முடியலயா? இந்த பாதிப்பு வரும் உஷாரா இருங்க!!
Smoking and tea consumption
டீ மற்றும் சிகரெட்டை ஒன்றாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
- இதயம் மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும்
- வயிற்றுப்புண்
- நுரையீரல் சுருங்குதல்
- நினைவாற்றல் இழப்பு
- கை, கால்களில் புண்கள்
- கருவுறாமை பிரச்சினைகள்
- ரத்த சோகை
- மலச்சிக்கல் மற்றும் வயிற்று தொடர்பான பிற பிரச்சனைகள்
- குடல் அலர்ஜி
Smoking and tea consumption
டீயும் சிகரெட்டும் சேர்ந்து குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வழிகள்:
- இந்த பழக்கத்திலிருந்து விடுபட மன உறுதியை வலுப்படுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
- டீ குடிப்பதை குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக மூலிகை டீ குடிக்கலாம்.
- நாள் முழுவதும் முடிந்தவரை தண்ணீர் குடியுங்கள். தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
- உங்களது உணவில் நிறைய நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
- பல சமயங்களில் மன அழுத்தம் இருக்கும் போது அதிகமாக டீ மற்றும் சிகரெட் குடிக்க தோன்றும். எனவே உங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தை முதலில் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.