கர்ப்பிணிகள் முதல்ல தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.. வெண்டைக்காயை ஒதுக்கமாட்டீங்க!!
Vendakkai During Pregnancy : கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வெண்டைக்காய் மிகவும் நன்மை பயக்கும். இது குழந்தைகளுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

கர்ப்பிணிகள் முதல்ல தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை.. வெண்டைக்காயை ஒதுக்கமாட்டீங்க!!
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் என்பது உலகில் மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயமாகும். அதே சமயம் ஒரு சவாலான காலகட்டமும் ஆகும். கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் அந்த பெண்ணை குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்வார்கள். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்.. என்னென்ன சாப்பிட கூடாது என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் வெண்டைக்காய் கொண்டு சில காய்கறிகளை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். வெண்டைக்காயில் கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் கர்ப்பிணி பெண்களுக்கு பல வழிகளில் மிகவும் நன்மை பயக்கும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்:
வெண்டைக்காயில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் குறிப்பாக வைட்டமின் பி9 குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்:
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வருவது பொதுவானது. வெண்டைக்காயில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனையை சுலபமாக தீர்க்க உதவுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை யாவது கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.
முதுகு வலியை குறைக்கும்:
கர்ப்ப காலத்தில் எலும்புகள் வலுவிழந்து இருப்பதால் முதுகு வலி, கை கால் வலி போன்ற வலிகள் ஏற்படும். வெண்டைக்காயில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வலியையும் குறைக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் தங்களது உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
பசியை கட்டுப்படுத்தும்:
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. இதனால் எடையும் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கர்ப்பகால சர்க்கரை நோய்: கட்டுப்படுத்த இதையெல்லாம் செய்ங்க!!
காலை நேர பிரச்சனையை தீர்க்கும்:
பித்தத்தால் காலையில் தலை சுற்றல், சோர்வு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வெண்டைக்காய் சாப்பிட்டால் பித்த அமிலங்களானது வழியாக வெளியேறிவிடும். இதனால் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது.
இரத்த குறைபாட்டை நீக்கும்:
கர்ப்ப காலத்தில் வெண்டைக்காய் சாப்பிட்டால் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்த குறைபாட்டை குறைக்க முடியும்.
இதையும் படிங்க: கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்ஸ்: மறைக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!
பிற நன்மைகள்:
- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வெண்டைக்காய் உதவுகிறது.
- வெண்டைக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் சி தேவியை பூர்த்தி செய்கிறது.
- வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவாக இருப்பதால் இது சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்பவே நல்லது
முக்கிய குறிப்பு:
வெண்டைக்காய் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் அத்தகையவர்கள் மருத்துவரிடம் அணுகிய பின்னரே வெண்டைக்காயை சாப்பிட வேண்டும்.