- Home
- உடல்நலம்
- Signs of Stroke : விக்கல் கூடவா பக்கவாத அறிகுறி? பக்கவாதம் வரும் முன் தோன்றும் '4' அசாரண அறிகுறிகள்
Signs of Stroke : விக்கல் கூடவா பக்கவாத அறிகுறி? பக்கவாதம் வரும் முன் தோன்றும் '4' அசாரண அறிகுறிகள்
பக்கவாதம் உடனடியாக நிகழ்வது அல்ல. முன்கூட்டியே அதற்கான அறிகுறிகள் தென்படும்.

Unusual Signs of Stroke
பக்கவாதம் திடீரென ஏற்படக்கூடிய நோய் அல்ல; இதற்கு முன்கூட்டியே உடலில் அசாதாரணமான அறிகுறிகள் தென்படும். இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
தலைவலி
திடீரென கடுமையான தலைவலி ஏற்படுவது மூளையில் இரத்த உறைவு இருப்பதை குறிக்கலாம். பொதுவாக தலைவலி மன அழுத்தம், நீரிழிப்பு போன்றவையால் ஏற்பட்டாலும், சில நேரங்களில் கடுமையான தலைவலி மூளையில் உள்ள அழுத்தத்தை குறிக்கும். இதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்யக் கூடாது. தலைவலியுடன் குமட்டல் உணர்வு, பார்வை கோளாறுகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது மூளையில் இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
விக்கல்
எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி விக்கல் ஏற்படுவது நல்லதல்ல. இது ஆரம்பத்தில் பெரிய தொந்தரவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து விக்கல் வருவது நல்ல அறிகுறி கிடையாது. அதிலும் பெண்களுக்கு விக்கல் தொடர்ந்து ஏற்படுவது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். மூளையின் சுவாசம், விழுங்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதி தான் மெடுல்லா. இது பக்கவாதத்தின் போது பாதிக்கப்படுகிறது. சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் தொடர்ந்து விக்கல் ஏற்படுவது பக்கவாதம் ஏற்படும் அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் உடல் பலவீனம், பேசுவதில் சிரமம் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுங்கள்.
மார்பு வலி
மாரடைப்பு வரும்போது ஏற்படுகிற மார்பு அழுத்தம் அல்ல. மார்பில் இறுக்கம், எரியும் உணர்வு அல்லது அசௌகரியம் ஆகியவை ஏற்படுவது அமிலத்தன்மை அல்லது அஜீரணம் என மக்கள் நினைக்கலாம். ஆனால் மூளையின் நாளத்தில் ஏற்படும் உறைவு காரணமாக ஆக்ஸிஜன் செல்வதில் குறைபாடு ஏற்படுவதாலும் இவை ஏற்படும். சொல்ல முடியாத அளவுக்கு மார்பு வலி ஏற்பட்டால் அதை புறக்கணிக்க வேண்டாம்.
மன அழுத்தம்
நம் உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகம் வெளியிடப்படுகிறது. அட்ரினலின் சுரப்பும் அதிகமாக இருக்கும். இது இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். முன்னரே இரத்த சர்க்கரை கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இரத்த உறைவு அபாயத்தை இது அதிகப்படுத்தலாம்.
இந்த அறிகுறிகள் ஏதேனும் ஒருநாள் ஏற்பட்டால் அது இயல்பானது. ஆனால் அடிக்கடி ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யாதீர்கள். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.