MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • 30 செகண்ட்ஸ் போதும்! வீட்டிலேயே பார்லர் ஸ்டைல் பெடிக்யூர்! 6 மேஜிக் டிப்ஸ்!

30 செகண்ட்ஸ் போதும்! வீட்டிலேயே பார்லர் ஸ்டைல் பெடிக்யூர்! 6 மேஜிக் டிப்ஸ்!

30 செகண்டில் முழு பெடிக்யூரையும் செய்து முடிக்க முடியாது என்றாலும், ஒவ்வொரு ஸ்டெப்பையும் வெறும் 30 செகண்டில் செட் செய்துவிட்டு, உங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டே வீட்டிலேயே பார்லர் ரேஞ்சுக்கு கால்களைப் பளபளப்பாக்க சூப்பர் ஐடியாக்கள் உள்ளன.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 06 2026, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
30 செகண்ட் 'மவுத்வாஷ்' மேஜிக்!
Image Credit : Getty

30 செகண்ட் 'மவுத்வாஷ்' மேஜிக்!

கால்களை ஊற வைக்க சுடுதண்ணி, உப்புனு தேடி அலையாதீங்க. வெறும் 30 செகண்டில் டப்பில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, உங்க வீட்டில் இருக்கும் 'மவுத்வாஷ்' (Lysine/Listerine) ஒரு மூடி ஊற்றி கால்களை வையுங்கள். இதில் இருக்கும் ஆல்கஹால் மற்றும் ஆன்டி-செப்டிக் குணங்கள், பாதத்து துர்நாற்றத்தையும் கிருமிகளையும் நொடியில் விரட்டிடும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பாதியாக நறுக்கிய தக்காளி மற்றும் சர்க்கரை.
Image Credit : Getty

பாதியாக நறுக்கிய தக்காளி மற்றும் சர்க்கரை.

பாதியாக நறுக்கிய தக்காளியின் மேல் கொஞ்சமாக சர்க்கரையை (சீனி) தூவிக்கோங்க. அதை அப்படியே எடுத்து கணுக்கால் மற்றும் பாதங்களில் 30 செகண்ட்ஸ் வட்ட வடிவில் தேய்த்துக் கொடுங்கள். தக்காளியின் அமிலத்தன்மை கால்களில் உள்ள கருமையை நீக்கும், சர்க்கரை இறந்த செல்களை சட்டுனு வெளியேற்றும்!

Related Articles

Related image1
Winter Foot Care : ஒரே ஒரு பொருள்தான்!! குதிகால் வெடிப்புக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்
Related image2
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
36
எலுமிச்சை தோல் மற்றும் வாஸ்லைன்.
Image Credit : Getty

எலுமிச்சை தோல் மற்றும் வாஸ்லைன்.

நகங்கள் மஞ்சள் நிறமா, பொலிவில்லாம இருக்கா? எலுமிச்சம் பழத்தோலில் கொஞ்சம் வாஸ்லைன் (Vaseline) தடவி, நகங்களின் மேல் 30 செகண்ட்ஸ் மென்மையாக மசாஜ் பண்ணுங்க. நகங்கள் உடனே நேச்சுரல் ஷைனிங் ஆகிடும், கியூட்டிகல்ஸும் (Cuticles) சாஃப்ட் ஆகிடும்!

46
'பழைய டூத்பிரஷ்' வித்தை!
Image Credit : Getty

'பழைய டூத்பிரஷ்' வித்தை!

நகங்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்கை எடுக்க கஷ்டப்பட வேண்டாம். உங்க வீட்டில் இருக்கும் பழைய டூத்பிரஷ்ஷில் கொஞ்சம் சோப் அல்லது ஷாம்பு தொட்டு, 30 செகண்ட்ஸ் நகங்களை மட்டும் பிரஷ் பண்ணுங்க. நக இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மொத்த அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்!

56
தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்தி
Image Credit : Getty

தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்தி

குதிங்கால் வெடிப்பு வலிக்கிறதா? கொஞ்சம் தேங்காய் எண்ணெயில், மெழுகுவர்த்தி உருகிய மெழுகை மிக்ஸ் பண்ணி ஒரு டப்பாவில் வச்சுக்கோங்க. தூங்குறதுக்கு முன்னாடி வெறும் 30 செகண்ட்ஸ் எடுத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, சாக்ஸ் (Socks) போட்டுக்கோங்க. அடுத்த நாள் காலைல உங்க கால் பஞ்சு போல மாறும்!

66
இன்ஸ்டன்ட் 'ஆலிவ் ஆயில்' க்ளோ!
Image Credit : Getty

இன்ஸ்டன்ட் 'ஆலிவ் ஆயில்' க்ளோ!

பெடிக்யூர் எல்லாம் முடிச்சாச்சு, கடைசியாக உங்க பாதங்கள் எப்போதும் மாய்ஸ்சுரைஸ்டா இருக்கணும்ல? ஒரு சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் எடுத்து பாதங்கள் முழுக்க 30 செகண்ட்ஸ் அப்ளை பண்ணுங்க. அவ்வளவுதான்... பார்லருக்கு போகாமலே உங்க கால்கள் இப்போ செம சாஃப்ட் அண்ட் கியூட்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
பாத பராமரிப்பு குறிப்புகள்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட் இல்லாம வெயிட் குறைக்கணுமா? நீங்க சாப்பிடுற முறையை மாத்துங்க!
Recommended image2
Cooking Oil: பஜ்ஜி, பூரி சுட்ட எண்ணெய் கறுப்பா இருக்கா? 1 நிமிஷத்துல இப்படி சுத்தம் பண்ணுங்க!
Recommended image3
underarm odor : அக்குள் துர்நாற்றத்தை தடுக்க 5 சீக்ரெட் வழிகள்
Related Stories
Recommended image1
Winter Foot Care : ஒரே ஒரு பொருள்தான்!! குதிகால் வெடிப்புக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்
Recommended image2
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved