- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Foot Care : ஒரே ஒரு பொருள்தான்!! குதிகால் வெடிப்புக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்
Winter Foot Care : ஒரே ஒரு பொருள்தான்!! குதிகால் வெடிப்புக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்
குளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பை சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் முற்றிலும் சரி செய்து விடலாம். அவை என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Home Remedies For Cracked Heels In Winter
குளிர்காலம் வந்தாலே சிலருக்கு குதிகால் வெடிப்பு அதிகமாகவே ஏற்படும். பாதத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருத்தல், அதிக சூடான நீரில் குளித்தல், பாதங்களை சரியாக கவனிக்காமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் குதிகள் வெடிப்பு ஏற்படும். குதிகால் வெடிப்பை போக்க சிலர் விலையுயர்ந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்காமல் வருந்துகிறார்கள். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குதிகால் வெடிப்பை முற்றிலும் நீக்கிவிட முடியும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கல் உப்பு ;
கல் உப்பு குதிகால் வெடிப்புக்கு ரொம்பவே நல்லது. சூடான நீரில் கல்லு உப்பு சேர்த்து உங்களது பாதங்களை சிறிது நேரம் அதில் வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்பு முற்றிலும் நீங்கிவிடும்.
கற்றாழை ஜெல் ;
குளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பை முற்றிலும் நீக்குவதற்கு கற்றாழை ஜெல் சிறந்த தேர்வாக இருக்கும். இது பாதத்தில் இருக்கும் இறந்த சரும செல்களை அகற்றி பாதத்தை மென்மையாகும். இதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் போல பயன்படுத்தவும்.
வாழைப்பழம் ;
இதற்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தை பேஸ்ட் போலாக்கி கோளாக்கி அதை பாதங்களில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு பாதங்களை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு நீங்கி, பாதம் மென்மையாகும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் :
இவை இரண்டிலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாகவே உள்ளன. குதிகால் வெடிப்பை போக்க இவை இரண்டும் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் அரைத்து அந்த பேஸ்ட்டை குதிகாலில் தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு கால்களை கழுவும்.
பேக்கிங் சோடா :
சூடான நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து அந்த நீரில் கால்களை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வைக்கவும். குதிகாலில் இருக்கும் விரிசலை குணமாக்க இந்த குறிப்பு உதவும்.
நினைவில் கொள் :
குளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பை போக்க மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களை தவிர, தினமும் உங்களது பாதத்தை ஈரப்பதமாக வைக்கவும், சரியான காலணிகளை அணியவும், நிறைய தண்ணீர் குடிக்கவும் இப்படி செய்வதன் மூலம் குதிகால் வெடுப்பு நீங்கி, உங்கள் பாதம் மென்மையாக மாறும்.

