ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? ஒரே வாரத்தில் எடை அதிகரிக்க இதை சாப்பிடுங்க!
ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க உதவும் சில உணவுகள் மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Healthy Weight Gain: Foods to Eat : பலர் தாங்கள் சாப்பிடும் உணவு முதல் குடிக்கும் பானங்கள் வரை கவனக்குறைவாக இருப்பதால் உடல் பலவீனமடைவது மட்டுமல்லாமல் அவர்களது ஆரோக்கியமும் சீர் குலைந்து விடுகிறது. எனவே தேகமடைந்த உங்களது உடலுக்கு புதிய உயிர் கொடுக்க நீங்கள் விரும்பினால், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை இன்றே சாப்பிட தொடங்குங்கள். கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவுகள் உங்களது உடலை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று இப்போது பார்க்கலாம்.
Foods for Healthy Weight Gain
கால்சியம் மற்றும் புரதம் :
புரதம், கால்சியம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை தசைகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உடல் எடையை அதிகரிக்கவும், உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இதற்கு பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் எடையை அதிகரிக்க உதவும். மேலும் இவற்றில் அதிக அளவு கால்சியம், புரதம் உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தும்.
Foods for Healthy Weight Gain
உலர் பழங்கள் :
நீங்கள் ரொம்பவே ஒல்லியாகவும், பலவீனமான உடல்வாகை கொண்டவராக இருந்தால் உங்களது உணவில் உலர் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உலர் பழங்கள் தான் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாகும். முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம், பாதம், பிஸ்தா போன்றவை இதில் அடங்கும். இவை உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பதற்கும் உதவும். கலோரிகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உலர் பழங்களில் உள்ளதால், இதை நீங்கள் ஸ்நாக்ஸ் ஆக கூட எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: அடிக்கடி 'டீ' குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்; ஆனா உடல் எடை அதிகரிக்குமா?
Foods for Healthy Weight Gain
நட்ஸ் வெண்ணெய் ;
உங்களது எடையை விரைவில் அதிகரிக்க விரும்பினால் நட்ஸ் வெண்ணெய் சாப்பிடுங்கள். இதில் அதிகளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் அவை எடையை வேகமாக அதிகரிக்க பெரிதும் உதவும். இதுதவிர பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளையும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் மற்றும் உடல் பலப்படுத்தப்படும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் எடையை அதிகரிக்க பாதாம் எப்படி கொடுக்கலாம்?
Foods for Healthy Weight Gain
பழங்கள் :
ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க விரும்பினால் பலன்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் வாழைப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், கொய்யா, அத்திப்பழம், பப்பாளி ஆகியவை மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நீங்கள் விரும்பினால் வாழைப்பழத்தில் மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். தொடர்ந்து குடித்து வந்தால் ஒரு சில வாரங்களிலேயே நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
Foods for Healthy Weight Gain
காய்கறிகள் :
பழங்கள் போலவே காய்கறிகளையும் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் வேகமாக உடல் எடை அதிகரிக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, கொண்டை கடலை, பீன்ஸ், சோளம் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்கும் மற்றும் பலவீனம் நீக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், நீங்கள் எந்த அளவிற்கு காய்கறிகளை எடுத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களது ஆரோக்கியத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.