உடற்பயிற்சி செய்யும் போது இந்த தவறை மட்டும் இனி செய்யாதீங்க! காலை, மாலை எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யணும்?
காலை, மாலை, மதியம் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், கவனமாக இல்லாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும். உடற்பயிற்சி எப்போதும் சாப்பிட்ட உடனே செய்யக் கூடாது. அதைப் போலவே, உடற்பயிற்சி செய்யும்போது சரியான நேரம் அவசியமான ஒன்று. அண்மையில் வெளியான ஆய்வு, காலை அல்லது மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்பவர்களை விடவும், மதியம் உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட காலம் வாழும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வில், காலை 11 மணி முதல் 5 மணி வரை, மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை, காலை 5 மணி முதல் 11 மணி வரை என மூன்று நேரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில், ஒரு நாளில் எந்த நேரமும் மிதமான, தீவிரமான உடற்பயிற்சி நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்தை சேர்ந்த 92 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் உடல்நலம் மதிப்பீடு செய்யப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு அவர்களுடைய செயல்பாடுகளை கணக்கிடும் வகையில் முடுக்கமானி என்ற சாதனம் (accelerometer) கொடுக்கப்பட்டது. அவர்களுடைய செயல்பாடுகளை அவை பதிவு செய்தன. ஆராய்சியாளர்கள் நீண்டகாலமாக இறப்பு பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் பங்கேற்பாளர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் 3 சதவீதம்) இறந்துவிட்டனர். அதில் ஆயிரம் பேர் இதய நோயாலும், 1,800 பேர் புற்றுநோயாலும் இறந்துள்ளனர்.
ஆய்வு தரவுகளின்படி, மதியம் உடற்பயிற்சி செய்பவர்கள் இறக்கும் அபாயம் குறைவாக இருந்துள்ளது. காலை, மாலை ஆகிய வேளைகளில் உடற்பயிற்சி செய்பவர்களுடன் ஒப்பிடும்போது, மதியம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?
நாம் தொடர்ந்து மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இதனால் இறப்பு விகிதம் குறைகிறது. இதய நோய், புற்றுநோய் அபாயமும் குறையும். குறிப்பாக, உடற்பயிற்சியின் நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் அல்லது வாராந்திர வழக்கத்தின் ஒரு பகுதியாக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது முக்கியமானது. காலை, மாலை, மதியம் எந்த நேரமோ உங்களுக்கு ஏற்ற நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருக்கக் கூடாது.
இதையும் படிங்க: அட! இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!