நீங்கள் உப்பு அதிகமாக சாப்பிடுபவரா? அப்படியானால் இதை படிங்க முதல்ல..!!
ஒரு சராசரியான மனிதனுக்கு பரிந்துரைக்கப்படும் தினசரி உப்பு எவ்வளவு தெரியுமா? நீங்கள் அதிக உப்பு சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் தெரியுமா?
salt
சமையல் எவ்வளவு பக்குவமாக இருந்தாலும், அதில் போதிய உப்பு இல்லாமல் போனால், எந்த உணவும் சுவைக்காது. எந்தவொரு சமையலுக்கும் உப்பு இன்றியமையாதது. அதுதான் உங்களுடைய சமையல் பக்குவத்தை தூக்கி நிற்கிறது. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சிலருக்கு உப்பு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
அதன்படி சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் வரை உப்பு சாப்பிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இனிப்புகள், காய்கறிகள், ஊறுகாய்கள் மற்றும் எண்ணெய் உணவுகளை வைத்து இந்த கணக்கு கூறப்படுகிறது. அதேசமயத்தில் இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், நம் உடலில் அதிகளவு உப்பு சேர்ந்துவிடுகிறது. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவில் அதிக உப்பு உள்ளது.
சோடியம் நமது உடலுக்கு மிகவும் அவசியமான கனிமங்களில் ஒன்றாகும். அது பெரும்பாலும் உப்பின் மூலமாகவே நம் உடலுக்குள் செல்கிறது. அனைத்து உணவுகளிலும் சோடியம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் என அனைத்து விதமான உணவுகளிலும் சோடியும் உள்ளது. ஆனால் அதை மிகவும் அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் இரத்த அழுத்தம், இருதயப் பிரச்னை, நிரம்பு ஆரோக்கியம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
ஆனால் உப்பை உண்ணும்போது இயற்கையாகவே சோடியம் நம் உடலில் சேரும். உடலின் முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய ஒரு நாளைக்கு 500 மில்லிகிராம் சோடியம் தேவைப்படுகிறது. ஆனால், அதிக உப்பை சாப்பிட்டால், அதிக சோடியம் நம் உடலை சென்றடையும். சோடியம் அளவு அதிகரிப்பது பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அதேபோல், குறைந்த சோடியம் அளவும் பல பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும்.
ஒருநாளைக்கு சராசரியாக மனிதர்கள் 2400 மில்லிகிராம் வரை உப்பு சாப்பிடலாம். அதாவது ஒரே ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மட்டுமே. இருப்பினும், குழந்தைகள் பெரியவர்களை விட மிகக் குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். அதிக உப்பை உட்கொள்வது இரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுத்து, பின்னர் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் நீண்ட காலமாக அதிக உப்பை சாப்பிட்டால், அது சிறுநீரகத்தின் திறனை பாதிக்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் தொடர்ந்து அதிகப்படியான உப்பை வெளியேற்ற முயற்சிப்பதால், அவற்றுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும். பின்நாளில் சிறுநீரக செயலிழப்புக் கூட ஏற்படலாம்.
அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??
அதிகளவு உப்பு சாப்பிடுவதால் எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பு ஏற்படலாம். இது இறுதியில் எலும்பு இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது. அதிக உப்பு உணவை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு அதிக தாகம் ஏற்படும். அதிகப்படியான உப்பு உட்கொள்வதைக் குறைப்பதன் மூலமும் உடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த முடியும்.
இந்திய உணவுகளில் உப்பு அதிகம். பலர் தங்கள் வழக்கமான தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளில் கூட உப்பு சேர்க்க விரும்புகின்றனர். மேலே உள்ள எந்த பிரச்சனைகளையும் இப்போது வரை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், எந்த கவலையும் கிடையாது. ஆனால் எப்போதும் விழிப்புடனும் ஆரோக்கிய நலன் கொண்டும் இருப்பது மிகவும் முக்கியம்.