அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??
காதலர், கணவர், துணையை தவிர மற்றவர்கள் நம் உதட்டை பார்த்தால் அசவுகரியம் தான் ஏற்படும். அப்படியும் நம் உதட்டை மற்றவர்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
உங்களுடைய அன்பிற்குரியவரை தவிர, மற்ற நபர்கள் உங்களது உதடுகளை பார்த்துக் கொண்டே இருந்த அனுபவம், உங்களில் எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது? அப்படிப்பட்ட நேரத்தில் நிச்சயமாக ஆயிரம் எண்ணங்கள் உருவாகி இருக்கும். அந்த நபரின் எண்ணம் தான் என்ன? இப்படி வைத்த கண் வாங்காமல் உதடுகளை பார்த்துக் கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன? ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ? என்று பல்வேறு சிந்தனைகள் அப்போது உங்களுடைய மனதுக்குள் தோன்றி மறைந்திருக்கும். எனினும் ஒருவருடைய பார்வை அடிக்கடி நம் உதடுகளை நோக்கி திரும்புவது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
வேறு காரணமும் உள்ளது
ஒரு எதிர்பாலனத்தவர் உங்களுடைய உதட்டை பார்த்துக் கொண்டே இருந்தால், அது தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. உங்களுடைய பேச்சு சலிப்பு ஏற்படும் பட்சத்தில், எதிரில் நிற்பவர் உங்கள் உதடுகளை பார்த்து தொடர்ந்து கவனிக்க முயற்சிப்பார். அப்போது ரொம்பவும் உதடுகளை உற்று பார்க்க வேண்டியவரும். இதனால் உங்களுக்கு எதிரில் நிற்பவர் மீது உங்களுக்கு தவறான புரிதல் ஏற்பட்டுவிடக் கூடும். இந்த செயல்பாடு குறிப்பிட்ட நபர் மற்றும் இடத்துக்கு ஏற்றவாறு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
lips
இப்படிப்பட்ட காரணமும் உண்டு
உங்களை ஒருவர் விரும்பும் பட்சத்தில், அவர் உங்களுடைய உதட்டை விரும்பி பார்க்கக்கூடும். இது உங்கள் மீதான ரசனையின் பேரிலும் ஏற்படும். ஒருவேளை நீங்களே அந்த நபரை தவிர்த்தாலும், அவர் வலிய வந்து பேசுவார். இதை அந்த குறிப்பிட்ட நபரின் உடல்மொழியில் வாயிலாகவும் உணரலாம். உங்களை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையில், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். மேலும் உங்களை தொட்டு தொட்டு பேசுவதும், விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் செயல்பாடுகளையும் அவர் செய்யக்கூடும். ஒருவேளை அந்த நபர் உங்களுடைய காதலராக அல்லது கணவராக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. அப்படி யாருமில்லை என்றால், அந்த நபர் உங்களை டேட் செய்ய விரும்புகிறார் என்று பொருள்படும்.
புதியவரின் அறிகுறிகள்
மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளை முன்பின் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து வெளிவரும் போது, நீங்கள் உஷாராக வேண்டியது முக்கியம். உங்களை முத்தமிட வேண்டும் என்று விரும்பும் போது, அந்த நபர் தன் கால்களை உங்களை நோக்கி வைத்திருப்பார். அதேபோன்று அந்த நபரின் கருவிழிகள் அவ்வப்போது விரிந்து மூடும். அடிக்கடி கைகளை வைத்து முகத்தை பார்த்து உதடுகளை பார்ப்பது, கால்களை ஆட்டுவது போன்ற செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்துவார்.
உங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது
நீங்கள் சொல்ல வருவதை புரியாமல் போனாலும், அடிக்கடி உங்களது உதடுகளை மற்றவர்கள் கவனிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக பேச்சு மொழி இருக்கும். அதனால் இந்த செயல்பாட்டை எதிரில் இருப்பவர் வெளிப்படுத்தக் கூடும். நீங்கள் கூறுவது கேட்காத பட்சத்தில் அல்லது புரியாத பட்சத்தில் லிப் ரீடிங் மூலம் அவற்றை அறிந்துகொள்ள முயலுவார். அதையடுத்து தொடர்ந்து உங்களுடைய உதடுகளின் அசைவை வைத்து, நீங்கள் கூறும் தகவல்களை அவர் புரிந்துகொள்வார்.
உதட்டின் மீதான ஈர்ப்பு
மேலே சொன்ன அறிகுறிகள் அல்லது செயல்பாடுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் போதுவானவை. ஆனால் குறிப்பிட்ட இந்த தகவல் பெரும்பாலும் பெண்களையேச் சேரும். சிலருக்கு உங்களுடைய உதடு எந்த காரணமும் இல்லாமல் பிடித்து போய்விடும். அப்படிப்பட்ட பட்சத்தில் அதை அவ்வப்போது மற்றவர்கள் பார்ப்பார்கள். உங்களுடைய லிப்ஸ்டிக் அல்லது லிப்ஷேடுக்கு ஏற்றவாறு, உங்களது உதடுகளை மற்றவர்கள் நோட்டம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் இது சற்று சங்கோஜமாக தெரிந்தாலும், நாளிடைவில் அது பழக்கமாகிவிடும். இதுதான் காரணம் என்று தெரிந்துகொள்ளும் பட்சத்தில், நீங்கள் அடிக்கடி உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மாற்றுவது, உடைக்கு ஏற்றுவாறு லிப்ஷேடை பராமரிப்பது போன்றவற்றை செய்யுங்கள். இது உங்களை மேலும் பிரபலமாக்கும்.