வெறும் வயிற்றில் 1 டம்ளர் கற்றாழை ஜூஸ் ; பல பிரச்சனைகளுக்கு தீர்வு!
மிகவும் எளிதாக வீடுகளில் வளர கூடிய கற்றாழை எடுத்து, ஜூஸ் போட்டு குடிப்பதால் பல பிரச்சனைகள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?
முதலில் கற்றாழை ஜூஸ் செய்ய, கற்றாழைத் தண்டை வெட்டி எடுத்து, தோலை உரிச்சு உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லுடன் ரெண்டு துண்டு இஞ்சி, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணி சேர்த்து மிக்ஸில போட்டு அரைச்சு எடுக்கவும். இதை வடிகட்டிட்டு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இனிப்பு வேண்டாம் என நினைப்பவர்கள், மற்றும் சர்க்கரை நோயாளிகள் மோரில் கலந்து, இதில் சிறிதளவு உப்பு மற்றும் சீராக தூள் சேர்த்து குடிக்கலாம்.
கற்றாழை ஜூஸில் உள்ள சத்துக்கள்:
இதில் விட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்னு நிறைந்துள்ளதால், இந்த கற்றாழை ஜூஸை டயட்டில் இருப்பவர்களும் தாராளமாக குடிக்கலாம். அதே போல் பெண்கள், ஆண்கள், என அனைவருமே குடுப்பது நல்லது. இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
செரிமான மற்றும் உடலுக்கு சத்தியை கொடுக்கும்
எனர்ஜி
ஒருவருக்கு நீர் சத்துடன், எனர்ஜியையும் இந்த கற்றாழை ஜூஸ் கொடுக்கிறது. இதில் விட்டமின்கள், தாதுக்கள்னு நிறைந்துள்ளது. வெளியில் செல்லும் போது சோர்வாக உணர்ந்தால், பாட்டிலில் அடைத்த ஜூஸ் குடிப்பதை தவிர்த்து கற்றாழை ஜூஸை குடியுங்கள். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்தால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
செரிமானம்:
கற்றாழையில், செரிமானத்த மேம்படுத்த உதவும் என்சைம்கள் நிறைந்துள்ளது. அதனால் காலையில வெறும் வயித்துல கற்றாழை ஜூஸ் குடித்தால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, வயிறு உப்புசம்னு எல்லாத்தையும் சரி செய்து செரிமானத்த மேம்படுத்தும்.
சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது:
சருமம்
சரும ஆரோக்கியத்தில் கற்றாழையின் பங்கு மிக முக்கியமானது. எனவே தான் இதனை பல அழகு சாதன பொருள்களில் சேர்க்கிறார்கள். கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதே போல் விட்டமின் சி-யும் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் இதை நீங்கள் குடிக்கும் போது, உங்களின் சருமம் ஈர்ப்பத்துடனும் இருக்கும்.
ரத்த சர்க்கரை
சர்க்கரை நோயாளிகள் கற்றாழை ஜூஸை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது சர்க்கரையில் அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுவதோடு, சர்க்கரையை குறைக்கவும் உதவும். கற்றாழை ஜூஸில் கலோரிகள் மிகவும் குறைவு.
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீங்க; இல்லன்னா டேஞ்சர் தான்!
நோய் எதிர்ப்பு மற்றும் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தி
விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கற்றாழை ஜூஸ் குடிக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெறும் வயிற்றில் இதனை குடிக்கும் போது, சிறந்த பலனை அடையமுடியும்.
வாய் ஆரோக்கியம்
கற்றாழையில், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல் என நிறைய குணங்கள் இருக்கிறது. கற்றாழை ஜூஸ் தொடர்ந்து காலையில், வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் வாய் ஆரோக்கியம் மேம்படும். பற்கள் வெண்மையாக்கவும் இது உதவும்.
எடை குறைப்பு
தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸை வெறும் வயித்துல குடிப்பதால் எடை குறைக்க நினைப்பவர்கள் எளிதில் குறைக்கலாம். இதில் கொழுப்பை எரிக்க உதவுகிறது.