இரவில் இந்த அறிகுறிகள் வருதா? உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்குனு அர்த்தம்
இரவில் உங்களது உடலில் தோன்றும் சில அறிகுறிகள் சர்க்கரை நோயை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

Do You Have These Symptoms at Night? You May Have Diabetes - be Careful! இன்றைய காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் மற்றும் உடல் உழைப்பின்மை போன்றவையாகும். பொதுவாக, கணையமானது உடலில் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் போது அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாமல் போகும் போது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் தான் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். எனவே, உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், இரவில் தோன்றும் சில அறிகுறிகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகமாக தாகம் எடுத்தல்:
நீங்கள் இரவு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தணியவில்லையா? அதிகமாக தாகம் எடுக்குதா? உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது தான் இது நிகழும். காரணம், உடலில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரையின் அளவை போக்க அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது உடலில் நீர் இல்லாமல் போகும். இதனால் தாகம் அதிகமாக எடுக்கும். எனவே, இரவில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியான உடல் சோர்வு:
தினமும் இரவு அதிகப்படியான உடல் சோர்வு ஏற்படுகிறது என்றால், அதுவும் சர்க்கரை நோயின் அறிகுறிதான். உடலில் உயர் இரத்த சர்க்கரை அளவுகளை குளுக்கோஸ் பயன்படுத்துவதை செல்கள் தடுப்பதால், உடலுக்கு போதுமான அளவு ஆற்றல் கிடைக்காமல் போகும். ஆகவே, நீங்கள் நன்றாக ஓய்வெடுத்த பிறகும் இரவு அதிக சோர்வாக உணர்ந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.
அதிகப்படியான வியர்வை:
பகலில் கடினமாக உழைக்கும் போது அதிகமாக வியர்ப்பது சகஜம். ஆனால் இரவில் அதிகமாக வியர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறியாகும். உடலில் இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது உடல் வெப்பநிலை பாதிக்கும். இதனால் அதிக வியர்வை உண்டாகும்.
அதிகப்படியான சிறுநீர் கழிப்பது:
இரவில் எப்போதும் போல அல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்களா? இது டைப் 2 நீழிவு நோயின் அறிகுறியாகும். காரணம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அதிகமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும். மேலும் இதனால் தூக்கம் பாதிக்கப்படும்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்:
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். இரைப்பை அழற்சி பிரச்சினை உள்ளவர்களிடம் தான் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படும். எனவே, நீங்கள் இரவில் இந்த பிரச்சினையை சந்திக்கிறீர்கள் என்றால் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனை எடுத்துக்கொள்ளுங்கள்.