- Home
- உடல்நலம்
- Chicken vs Fish : சிக்கனை விட 'மீன்' தான் நல்லதா? இரண்டில் எதுல ஊட்டச்சத்து அதிகம் இருக்கு?
Chicken vs Fish : சிக்கனை விட 'மீன்' தான் நல்லதா? இரண்டில் எதுல ஊட்டச்சத்து அதிகம் இருக்கு?
சிக்கன் அல்லது மீன் இவை இரண்டில் எதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எது உண்மையில் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது என்று இங்கு காணலாம்.

Which is Healthier : Chicken or Fish?
சண்டை வந்தாலே பலரது வீடுகளில் அசைவம் தான் இருக்கும். சிலர் வாரத்திற்கு 2-3 முறையாவது அசைவம் சாப்பிடுவார்கள். சிக்கன், மட்டன், மீன், காடை, நண்டு, இறால்.. இவற்றில் எதை சாப்பிட்டாலும் சளிக்காது. இப்போது விவாதம் என்னவென்றால் சிக்கன், மீன் இவை இரண்டில் எது அதிக நன்மை பயக்கும் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
சிக்கனா?
புரதம் நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். சிக்கனில் புரதம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் வைட்டமின்கள், தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. கோழி இறைச்சியை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி அடையும், சர்க்கரை நோய், இதய நோய் ஆபத்தை குறைக்கும்.
ஆனால் சிக்கனை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் குறிப்பாக ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நாட்டு கோழியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
மீனா?
பொதுவாகவே கடல் உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இதில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர, புரதமும் மீனில் நிறைந்துள்ளது. இது தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவும். கண் ஆரோக்கியத்திற்கு நன்மை மேற்கும் வைட்டமின் ஏ இதில் உள்ளன. மீன் மூளை செயல்பாட்டிற்கும் உதவும். எனவே வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இருப்பினும் பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பிரஷ்ஷாக கிடைக்கும் கடல் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
எது நல்லது?
சிக்கன் மற்றும் இவை இரண்டிலும் ஏளனமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதால் எது சிறந்தது என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆகவே, உங்களது தனிப்பட்ட விருப்பங்கள் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

