MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Egg: முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மைத் தகவல் இதோ!

Egg: முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மைத் தகவல் இதோ!

முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு. உடலுக்குத் தேவையான அனைத்து விதமான புரோட்டீனையும் எளிதாகப் பெற உதவுகிறது

2 Min read
Author : Dinesh TG
Published : Oct 17 2022, 10:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நாம் தினசரி உண்ணும் உணவுகளில் எது ஆரோக்கியம் நிறைந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதோடு, எந்த உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில், முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு. உடலுக்குத் தேவையான அனைத்து விதமான புரோட்டீனையும் எளிதாகப் பெற உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6 மற்றும் பி12 ஆகியவையும், செலினியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் அடங்கியுள்ளன.
 

27

முட்டையில் உள்ள சத்துக்கள்

ஒரு முட்டையில் சராசரியாக 75 கலோரிகள் உள்ளது. மேலும் 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் ஆகியவையும் உள்ளன. இத்தனை சத்துக்களை கொண்ட முட்டையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

37

இதுவரையில் 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்ட நிலையில், 11 அமினோ அமிலங்களை நமது உடலே உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே, நம் உடலுக்கு கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரேயொரு உணவுப் பொருள் என்றால் அது 'முட்டை' தான். 
 

47

தினசரி முட்டை சாப்பிடலாமா?

முட்டை ஒரு முழுமையான புரதம் அதிகம் நிறைந்த உணவு. ஆகையால், இதனை தினந்தோறும் சாப்பிடலாம். தினசரி உணவில் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு, இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது என ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை சாப்பிடுவதால் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், முட்டை உடல் எடையைக் குறைக்கிறது. 

கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

57

உடல் எடை குறையும்

முட்டையைத் தனியாக சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கவும் செய்கிறது. இது, நமது  உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது. மேலும், பசியைக் குறைக்கவும் செய்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது. ஆகவே, முடிந்தவரையிலும் மற்ற உணவுகளுடன் முட்டையை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். 

67

சிலர் உடல் எடையை காரணம் காட்டி, முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்பார்கள். இது முற்றிலும் தவறாகும். முட்டையில் உள்ள கொழுப்பு, நல்ல கொழுப்பு என்பதனால் அது உடலுக்குத் தேவையான ஒன்றாகும்.

Badusha Sweet : இந்த தீபாவளிக்கு தித்திப்பான பாதுஷா செய்யலாம் வாங்க!

முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இது, உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதுகாக்கிறது. மேலும் முட்டையில் நோயை எதிர்க்கக் கூடிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. 

77

எவ்வளவு சாப்பிடலாம்?

பெரியவர்கள் தினசரி 2 முதல் 3 முட்டைகள் வரை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை கொடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர். அதே சமயத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, ஹாப்-பாயில் அப்படியே குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிடுவது நல்லது. அதாவது முட்டையை முழுவதுமாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
1 கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு இஞ்சி, பூண்டு தேவை? ருசியான சமையலுக்கு இதோ சரியான அளவு!
Recommended image2
Junk Food : 60 நாள் ஜங்க் ஃபுட் சாப்பிடாம இருந்தா உடம்புல என்னலாம் நடக்கும் தெரியுமா? இவ்வளவு நன்மைகளா?
Recommended image3
Papaya Benefits: பப்பாளி சாப்பிட்டா இந்த நோயெல்லாம் கிட்டவே வராது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved