Asianet News TamilAsianet News Tamil

Badusha Sweet : இந்த தீபாவளிக்கு தித்திப்பான பாதுஷா செய்யலாம் வாங்க!

இந்தியாவின் மிக பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகைகளில் ஒன்று பாதுஷா ஆகும். இந்த இனிப்பு வகை மிகவும் சாஃப்டாகவும் சுவையாகவும் இருக்கும்.

How to make badusha sweet recipe in Tamil
Author
First Published Oct 15, 2022, 11:30 PM IST

பொதுவாக இதனை பண்டிகை நாட்களில் ,வெளியில் பலகார கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் இந்த பாதுஷா நிச்சயமாக பிடிக்கும். இந்த தீபாவளிக்கு நாமே இதனை வீட்டில் சுவையாக எப்படி எளிமையான முறையில்செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

மைதா – 2 கப்
பால் – 1/4 கப்
தயிர் – 1/2 கப்
பட்டர் -1/4 கப்
சர்க்கரை -1 ஸ்பூன் 
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன் 
நெய் தேவையான அளவு

கேரளா ஸ்பெஷல் தித்திப்பான உண்ணியப்பம்! - ஈசியா செய்யலாம் வாங்க!

சக்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்:

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
குங்குமப்பூ – 2 சிட்டிகை 
ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன் 

அலங்கரிப்பதற்கு தேவையானபொருட்கள்

தேங்காய் துருவியது – 4 ஸ்பூன் 
மஞ்சள் நிறம் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். பின் அதனுடன் உருக்கிய பட்டர் , பால், மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து சாஃப்டான மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை 10 நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும். பின் அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். அடுத்து உருண்டைகளை நடுவில் மெதுவாக தட்டி குழிபோல் செய்து கொள்ள வேண்டும்.

ஜோவென பெய்யும் மழைக்கு இடையில் ஒரு ''அரபிக் டீ'' சாப்பிடலாமா?

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை கலந்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கரைந்து உருகி வருகையில் அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பாகு திக் ஆனதும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து பாதுஷாக்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை சர்க்கரை பாகில் சேர்த்து 3 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

அடுப்பில் pan வைத்து துருவிய தேங்காய் மற்றும் மஞ்சள் புட் கலர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது கலர் செய்த தேங்காயை பாதுஷாவின் மேலே தூவி அலங்கரித்தால் தித்திப்பானபாதுஷா ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios