MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Tablet : மாத்திரையை உடைத்து சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய தகவல்!

Tablet : மாத்திரையை உடைத்து சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய தகவல்!

Tablet : மாத்திரையை விழுங்குவதில் சிரமம் இருப்பதால் அதை உடைத்தோ, நசுக்கியோ சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, இது குறித்து மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுவதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 03 2026, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாத்திரையை உடைத்து சாப்பிடலாமா?
Image Credit : pinterest

மாத்திரையை உடைத்து சாப்பிடலாமா?

மாத்திரை விழுங்குவதே சிலருக்கு பிடிக்காது. இதில் பெரியதாக இருந்தால் அதை அப்படியே விழுங்குவது சிரமமாக இருக்கும். இதனால், மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவதும், எப்படியும் வயிற்றுக்குள்தானே போகப்போகிறது என்று பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிப்பதும் வழக்கம்.

ஆனால், எல்லா மாத்திரைகளையும் இப்படி உடைத்தோ, பொடியாக்கியோ எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால் மருந்தின் செயல்பாட்டில் என்ன மாற்றம் ஏற்படும்? உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சிகள் கூறுவது என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்
Image Credit : pinterest

மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்

மாத்திரைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. எனவே, எல்லா மாத்திரைகளையும் உடைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. அமெரிக்காவின் The Food and Drug Administration (FDA)-வின் வழிகாட்டுதலின்படி, சில மாத்திரைகளை மட்டுமே மருத்துவர் அல்லது மருந்தாளரின் ஆலோசனையுடன் பிரித்து எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக மாத்திரையின் நடுவில் கோடு (score line) இருப்பதால் அதை உடைத்து சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை என்று FDA குறிப்பிடுகிறது.

Related Articles

Related image1
Interesting Facts : வலி நிவாரணி மாத்திரை போட்டதும் வலி எப்படி குறையுது? வலி நிவாரணிகள் எப்படி வேலை செய்யுது தெரியுமா?
Related image2
Back Pain: முதுகு வலிக்கு குட்பை.! மாத்திரை வேண்டாம், தைலம் வேண்டாம்! இதை மட்டும் செஞ்சா போதும்.!
35
மாத்திரையை உடைத்தால் என்ன ஆகும்?
Image Credit : pinterest

மாத்திரையை உடைத்தால் என்ன ஆகும்?

சில மாத்திரைகளில், மருந்தின் அளவுகள்(doses) குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியாகும் வகையில் பல அடுக்கு கோட்டிங்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றை பாதியாக உடைத்தால், மருந்து ஒரே நேரத்தில் அதிகமாக வெளியேறி overdose ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து Institute for Safe Medication Practices (ISMP) வெளியிட்ட மருந்துப் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, Extended-release, Sustained-release, Controlled-release, Modified-release போன்ற மெதுவாக மருந்தை உடலில் வெளியிடும் மாத்திரைகளை உடைக்கவோ, நசுக்கவோ கூடாது.

அவ்வாறு செய்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் படிப்படியாக வெளியேற வேண்டிய மருந்து ஒரே நேரத்தில் அதிக அளவில் வெளியேறி, பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். பின்னர் தேவையான நேரத்தில் மருந்தின் தாக்கம் குறையும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

45
Special coating மாத்திரை
Image Credit : pinterest

Special coating மாத்திரை

அதேபோல் Enteric-coated அல்லது Gastro-resistant மாத்திரைகளையும் உடைக்கவோ, நசுக்கவோ கூடாது. National Health Service (NHS) வழிகாட்டுதலின்படி, வயிற்று அமிலத்திலிருந்து மருந்தைப் பாதுகாத்து, வயிற்றில் கரையாமல் குடலில் சென்று கரைவதற்காக இந்த வகை மாத்திரைகளின் மேல் பிரத்யேக பூச்சு (Special coating) இருக்கும்.

எனவே, அதை உடைத்தால் அல்லது நசுக்கினால் அந்தப் பாதுகாப்பு பூச்சு சேதமடைந்து, மருந்து வயிற்றிலேயே வெளியேறலாம். மருந்தின் செயல்திறன் குறையலாம். மேலும், சில மருந்துகள் வயிற்றில் நேரடியாக வெளியானால் வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

55
இறுதி முடிவு
Image Credit : pinterest

இறுதி முடிவு

மாத்திரையை உடைக்கும் முன் அதன் பெயர், வகை மற்றும் மருந்து லேபிளை சரிபார்த்து, மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கேட்பதே பாதுகாப்பானது.

குறிப்பு: இது பொதுவான மருத்துவத் தகவல் மட்டுமே. குறிப்பிட்ட மருந்தை உடைப்பது தொடர்பான முடிவை மருத்துவர்/மருந்தாளரின் ஆலோசனையுடன் எடுக்க வேண்டும்.

About the Author

V
Vishnupriya
சுகாதார நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fish: மீன் சாப்பிடும்போது இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!
Recommended image2
Child Focused Food: குழந்தைகளுக்கான உணவுகள் பெரியவர்களும் சாப்பிடலாமா? ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தகவல்கள்
Recommended image3
முடி அடர்த்தியா, நீளமா வளரணுமா? இந்த 8 உணவுகளை சாப்பிடுங்க!
Related Stories
Recommended image1
Interesting Facts : வலி நிவாரணி மாத்திரை போட்டதும் வலி எப்படி குறையுது? வலி நிவாரணிகள் எப்படி வேலை செய்யுது தெரியுமா?
Recommended image2
Back Pain: முதுகு வலிக்கு குட்பை.! மாத்திரை வேண்டாம், தைலம் வேண்டாம்! இதை மட்டும் செஞ்சா போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved