- Home
- உடல்நலம்
- Interesting Facts : வலி நிவாரணி மாத்திரை போட்டதும் வலி எப்படி குறையுது? வலி நிவாரணிகள் எப்படி வேலை செய்யுது தெரியுமா?
Interesting Facts : வலி நிவாரணி மாத்திரை போட்டதும் வலி எப்படி குறையுது? வலி நிவாரணிகள் எப்படி வேலை செய்யுது தெரியுமா?
How Pain Killer Tablet Works : நமக்கு உடலில் எதாவது வலி ஏற்பட்டால் மருத்துவர் வலி நிவாரணி மாத்திரைகளை பரிந்துரைப்பார். அந்த மாத்திரைகள் நம் உடலில் எவ்வாறு வலியை குறைகின்றன என்று தெரியுமா? அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்

How Pain Killer Tablet Works
நம்ம உடம்புல வலிங்கிறது ஒரு எச்சரிக்கை மணி மாதிரி. உடம்புல ஏதோ பிரச்சனைன்னு சொல்றதுக்குதான் வலி வருது. வலியை குறைக்க நிறைய பேர் வலி நிவாரணி (பெயின்கில்லர்) எடுத்துக்குறோம். ஆனா, அந்த மாத்திரையை போட்டதும் வலி எப்படி மாயமா மறையுதுன்னு யோசிச்சிருக்கீங்களா? வலி நிவாரணி மாத்திரைகள் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மூளைக்கு செல்லும் சிக்னல்
நரம்பியல் நிபுணர்கள் சொல்றபடி, வலிங்கிறது காயம் பட்ட இடத்துல இருந்து வர்றதில்ல. நம்ம உடம்புல இருக்குற ஸ்பெஷல் நரம்பு செல்கள், காயம் அல்லது வீக்கத்தை கண்டுபிடிச்சு, உடனே மூளைக்கு சிக்னல் அனுப்புது. இந்த சிக்னலைத்தான் நம்ம மூளை 'வலி'யா உணருது. அதனாலதான், வலியை உணர்றதே நம்ம மூளையிலதான் நடக்குது.
வலி நிவாரணி செயல்படும் விதம்
நாம வலி நிவாரணி மாத்திரையை சாப்பிட்டதும், அது முதல்ல வயித்துல கரைஞ்சு ரத்தத்துல கலக்குது. அங்க இருந்து உடம்பு முழுக்க பரவுது. சில மாத்திரைகள் சில நிமிஷத்துலயே வேலை செய்ய ஆரம்பிக்கும். சிலது வேலை செய்ய ஒரு மணி நேரம் வரைக்கும் ஆகும். இந்த மாத்திரைகள், உடம்புல வலியையும் வீக்கத்தையும் உண்டாக்குற ரசாயனங்களோட உற்பத்தியை குறைக்குது.
COX என்ற என்சைம் தடுக்கப்படுத்தல்
இபுப்ரூஃபன் (Ibuprofen), ஆஸ்பிரின் (Aspirin) மாதிரியான மாத்திரைகள், நம்ம உடம்புல இருக்குற COX என்ற என்சைமை (enzyme) தடுக்குது. இந்த என்சைம்தான் வீக்கத்தையும் வலியையும் அதிகப்படுத்துது. இந்த என்சைமோட செயல்பாடு குறையும்போது, வலி சிக்னல்களும் பலவீனமாகிடும். இதனாலதான், பெயின்கில்லர் போட்ட கொஞ்ச நேரத்துலயே வலி குறைஞ்ச மாதிரி நமக்குத் தோணுது.
எண்டோர்பின் ஹார்மோன் தூண்டப்படுதல்
சில வலி நிவாரணிகள் நேரடியா நரம்பு மண்டலத்துல (Nervous System) வேலை செய்யுது. இது மூளைக்குப் போற வலி சிக்னல்களை மெதுவாக்குது. இன்னும் சில மாத்திரைகள், உடம்புல இயற்கையா இருக்குற எண்டோர்பின் (Endorphin) என்ற ஹார்மோனை தூண்டிவிடுது. இந்த ஹார்மோன்கள் ஒரு இயற்கை வலி நிவாரணி மாதிரி செயல்படுது. இதனாலதான், ஒவ்வொரு விதமான வலிக்கும் ஒவ்வொரு விதமான மாத்திரையை டாக்டர்ங்க தர்றாங்க.
வலி நிவாரணி மாத்திரைகள் பக்க விளைவுகள்
வலி நிவாரணிகள் உடனடி நிவாரணம் கொடுத்தாலும், இதை அதிகமா அல்லது நீண்ட காலத்துக்கு பயன்படுத்தினா பிரச்சனைகள் வரலாம். வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரகப் பாதிப்பு, மத்த பக்க விளைவுகள் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால, டாக்டர் ஆலோசனை இல்லாம அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்துக்கிறது நல்லதில்லை. வலி அதிகமா இருந்தா, அதுக்கு என்ன காரணம்னு கண்டுபிடிச்சு சரியான சிகிச்சையை எடுத்துக்கணும்.

