தினமும் 2 பல் பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் உங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!
உயர் இரத்த அழுத்தத்திற்கு பூண்டு சாப்பிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இங்கு காணலாம்.
நவீன காலக்கட்டத்தில் மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். அதில் தவிர்க்க முடியாததாக உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆகவே தமனிகளில் இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்க இதயம் சிரமப்படுகிறது.
தவறான உணவுப் பழக்கம், தீராத மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் அதிகப்படியான சோடியம் சேருவது இந்தப் பிரச்னைக்கான முக்கியக் காரணங்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் தலைவலி, தலைசுற்றல், சோர்வு, இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகிய பிரச்சனைகள் வரத் தொடங்கும். உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும்போது பக்கவாதம் சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு போன்ற எல்லா பிரச்சனைகளும் வரும். ஆகவே இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு பூண்டு பயன்படும்.
உயர் இரத்த அழுத்தத்தால் நீங்கள் சிரமப்பட்டால் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தமனிகள் நாளடைவில் கடினமாகி, அவர்களுக்கு தொற்று, வீக்கம் ஆகிய பிரச்சனைகள் வரத் தொடங்கும். இந்த நேரத்தில் பூண்டு உங்களுக்கு உதவியாக இருக்கும். பூண்டில் உள்ள கந்தகம் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. பூண்டில் காணப்படும் அல்லிசின் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பச்சை பூண்டு கூட உண்ணலாம். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 பல் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: மஞ்சளை தெரியாம கூட இவங்க ரொம்ப பயன்படுத்தக்கூடாது... உடலுக்கு இவ்ளோ பாதிப்பு இருக்குது!!
பூண்டின் நன்மைகள்;
பூண்டு இரும்புச்சத்து, துத்தநாகத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. பூண்டு சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. பூண்டில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக
பூண்டில் உள்ள அல்லிசின் சளி மற்றும் காய்ச்சலுக்கு உதவுகிறது. பூண்டு உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.பூண்டில் உள்ள கந்தகம் அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலிக்கு எதிரானது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மன அழுத்தத்தை குறைக்கிறது.
இதையும் படிங்க: தயிர் உடலுக்கு குளிர்ச்சினு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 கிண்ணம் தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் இவ்ளோ நன்மை