MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மஞ்சளை தெரியாம கூட இவங்க ரொம்ப பயன்படுத்தக்கூடாது... உடலுக்கு இவ்ளோ பாதிப்பு இருக்குது!!

மஞ்சளை தெரியாம கூட இவங்க ரொம்ப பயன்படுத்தக்கூடாது... உடலுக்கு இவ்ளோ பாதிப்பு இருக்குது!!

சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். யாரெல்லாம் உண்ணக் கூடாது என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
Published : Jun 12 2023, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மஞ்சள் சமையலறையில் தவிர்க்கவே முடியாத மசாலா பொருள். அதுமட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல நற்குணங்களும் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். பல காய்கறிகள் மஞ்சள் இல்லாமல் சமைத்தால் நிறமாற்றம் அடையும். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, பல சுகாதார நிபுணர்கள் இதை தொடர்ந்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த மசாலா அனைவருக்கும் பயனுள்ளதாக இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க. மஞ்சளை சிலர் அதிகமாக எடுத்து கொள்ளவே கூடாது. அது யார் யார் என்பதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மஞ்சளை அதிகம் சேர்க்கக்கூடாது. 

நீரிழிவு நோயாளிகள்: 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும், இது உடலுக்கு நல்லதல்ல. அளவாக சேர்ப்பது நல்லது. 

35

மஞ்சள் காமாலை: 

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மஞ்சள் உண்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிகளவில் மஞ்சள் சாப்பிட விரும்பினால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இல்லையென்றால் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. 

45

சிறுநீரக கல் நோயாளிகள்: 

சிறுநீரக கல் என்பது மிகவும் மோசமான நோய். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் அதிக வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில், மஞ்சள் உட்கொள்வதை குறைக்க வேண்டும். மஞ்சள் அதிகம் சேர்க்கும்போது பிரச்சனை அதிகரிக்கலாம். 

இதையும் படிங்க: வெறும் 1 நிமிடத்தில்.. கரும்புள்ளிகளை போக்கும் அற்புத பொருள்.. இப்படி யூஸ் பண்ணுங்க!!

55

இரத்தப்போக்கு: 

மூக்கில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இரத்தக்கசிவு உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். மீறினால் இரத்தப்போக்கு அதிகரித்து, உடலில் இரத்த சோகை ஏற்படலாம். இது உடல் பலவீனத்திற்கு காரணமாக மாறும். 

இந்த நோய் பாதிப்புள்ளவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது பயப்படத் தேவையில்லை. மஞ்சள் ஆரோக்கியமானது தான்! 

இதையும் படிங்க: தண்ணீரில் இந்த 1 பொருள் போட்டு ஆவி பிடிப்பதால் முகத்தில் இத்தனை ஜொலிப்பு கிடைக்குமா? அறிவியல் உண்மை தெரியுமா?

About the Author

MP
maria pani
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Recommended image3
Chicken Noodles Cutlet: நூடுல்ஸில் இப்படி ஒரு ஸ்நாக்ஸா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறுமொறு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved