Cholesterol : காலைல இந்த 5 உணவுக்கு 'நோ' சொல்லாட்டி கொலஸ்ட்ரால் ஜெட் வேகத்துல ஏறும்!!
உங்களது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால் காலையில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளின் பட்டியல் இதோ.

ஆரோக்கியமற்ற காலை உணவுகள்
காலை உணவு ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில் இதுதான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. ஆகவே நாம் சாப்பிடும் காலை உணவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இப்படி நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் மற்றும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
ஆனால் நான் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவற்றில் கொலஸ்ட்ரால் நிறைந்து இருக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமான மாரடைப்பு போன்ற பிற இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக ஏற்கனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த அபாயங்கள் மேலும் அதிகரிக்கும். எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்க காலையில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அந்த உணவுகளின் பட்டியல் இங்கே.
1. வெள்ளை பிரட் :
நம்மில் பலர் காலை உணவாக வெள்ளை பிரட் டோஸ்ட் செய்து அல்லது ஜாம் வைத்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் வெள்ளை பிரெட் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவால் தயாரிக்கப்படுவதால், இதை தொடர்ந்து உட்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவும் கிடு கிடுவென கூடும். முக்கியமாக வெள்ளை ரெட்டில் எந்தவொரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. வெறும் கலோரிகள் மட்டுமே அதிகமாக உள்ளதால் இதை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளன.
2. பால் பொருட்கள் :
பலர் தங்களது காலை உணவில் கொழுப்பு நிறைந்த பால், சீஸ், க்ரீம் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்வார்கள். இந்த பழக்கமும் உங்களிடமிருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை வேகமாக அதிகரிக்கும். உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாது என்றால், கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
3. பொறித்த உணவுகள் :
இந்தியர்கள் பலரது வீட்டில் காலை உணவாக பூரி தான் இருக்கும். பூரி பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான காலை உணவாகும். ஆனால் காலை உணவில் பூரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோதுமை மாவில் தானே பூரி சுட்டு சாப்பிடுகிறேன், அது ஆரோக்கியத்திற்கு நல்லது தானே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதுவும் எண்ணெயில் தான் பொறிக்கப்படுவதால் அவற்றில் நிறைவேற்றுக் கொழுப்பு, சோடியம் அதிகமாகவே இருக்கும். நீங்கள் தினமும் காலையில் பூரி சாப்பிட்டு வந்தால் உங்களது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பை சீக்கிரமாகவே வரவழைத்து விடும்.
4. பேக்கரி உணவுகள் :
பரபரப்பான வாழ்க்கை முறையால் காலை உணவு செய்து சாப்பிட சிலருக்கு நேரமில்லை. இதனால் அவர்கள் பல வகையான ஸ்நாக்ஸ்களை காலை உணவாக சாப்பிடுகிறார்கள். பேக்கரி உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அதிகமாக உள்ளதால் அவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
5. சர்க்கரை செரில்கள் :
இப்போது பலரும் இதை காலை உணவாக விரும்பி சாப்பிடுகிறவர்கள். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பெஸ்ட் சாய்ஸாக இது உள்ளது. அதிக அளவு சர்க்கரை மற்றும் செயற்கை நிறமிகள் உள்ளதால், இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள சர்க்கரை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.