கோடையில் எண்ணெய் குளியல் போட்டால் கிடைக்கும் ஆச்சர்யமூட்டும் நன்மைகள்
கோடை காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Oil Bath Benefits in Summer
Benefits of Oil Bath in Summer : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலின் தாக்கத்தால் பல உடல் உள்ள பிரச்சனைகள் ஏற்படும். எனவே சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க சிறந்த வழி எண்ணெய் மசாஜ் குளியல் தான். ஆம், கோடைகாலத்தில் வெயிலில் தாக்கத்திலிருந்து உடலை குளிர்விக்க எண்ணெய் மசாஜ் ரொம்பவே நல்லது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் இணை மசாஜ் செய்வதை கடைப்பிடிக்கிறார்கள். ஆயுர்வேதத்திலும் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. சரி இப்போது உடலுக்கு ஊட்டமளிக்கும் எண்ணெய் மசாஜ் குளியல் கோடைகாலத்தில் ஏன் முக்கியம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Oil Bath in Summer
கோடையில் எண்ணெய் மசாஜ் குளியல் ஏன் முக்கியம்?
எண்ணெய் மசாஜ் குளியல் என்பது இந்திய பாரம்பரியத்தில் ஒன்றாகும். பொதுவாக தீபாவளி நாளில் மட்டுமே எண்ணெய் குளியல் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல. உடல் சூட்டை தணிக்கவே எண்ணெய் மசாஜ் குளியல் காலம் காலமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, கோடையில் சுட்டெரிக்கும் வெகுதிலிருந்து உடலின் சூட்டை தணிக்க சமன் செய்ய தான் எண்ணெய் குளியல் உதவுகிறது.
Best Oil For Oil Bath
எண்ணெய் குளியலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது?
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி, இந்த எண்ணெய் தான் பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் இன்று வரை நல்லெண்ணெய் குளியல் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: எண்ணெய் தேய்ச்சு குளிக்குறவங்க.. பச்ச தண்ணீல குளிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?
Oil Massage Bath
எப்போது எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்?
நீங்கள் எண்ணெய் குளியல் செய்ய ப் போகிறீர்கள் என்றால் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். அப்போதுதான் அஜீரண பிரச்சனை ஏதும் ஏற்படாது. இல்லையெனில், நீங்கள் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகாது. அதுபோல எண்ணெய் மசாஜ் 20 நிமிடங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு உடல் உஷ்ணம் தனியட்டும் என்று அதிக நேரம் காத்திருக்காமல் 40 நிமிடங்களுக்குள் குளித்து விடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எண்ணெய் மசாஜ் குளியல் செய்து வந்தால் போதும்.
இதையும் படிங்க: தலைக்கு எண்ணெய் வைச்சு குளிச்ச அப்பறம் பண்ணக் கூடாத '3' விஷயங்கள்!!
Oil Massage Bath Procedure
எப்படி எண்ணெய் மசாஜ் குளியல் செய்ய வேண்டும்?
எண்ணெய் மசாஜ் குளியலுக்கு ஒரேடியாக எண்ணெயை தலையில் ஊற்ற வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாக தடவவும். தலைக்கு எண்ணெய் தடவிய பிறகு முழு உடலுக்கும் எண்ணெயை தேய்க்க வேண்டும். அதாவது உங்களது முழங்கால், முழங்கை, தோள்பட்டை, முதுகு தண்டு, மூட்டு போன்ற இடங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக முகத்தில் மட்டும் எண்ணெய் தடவ வேண்டாம். எண்ணெய் மசாஜ்க்கு பிறகு இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். அதுதான் நல்லது. முக்கியமாக, எண்ணெய் குளியலுக்கு பிறகு உடனே தூங்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Benefits of Oil Bath in Summer
எண்ணெய் குளியல் நன்மைகள்:
- உடலை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவும் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
- மன அழுத்தம் பதட்டத்தை குறைக்கும். இது தவிர தசைகளை தளர்த்து.
- சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைக்க உதவும். முக்கியமாக சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். கூடுதலாக, உடலில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவும்.
- சருமத்தில் நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் வருவதை தடுக்க உதவும். மேலும் சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கும்.
குறிப்பு : மாதவிடாய் காலத்தில் எண்ணெய் மசாஜ் குளியல் செய்ய வேண்டாம். அதுபோல உங்களுக்கு சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எண்ணெய் மசாஜ் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.