எண்ணெய் தேய்ச்சு குளிக்குறவங்க.. பச்ச தண்ணீல குளிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?
Hot Water And Oil Bath : எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள் பச்சைத் தண்ணீருக்கு பதிலாக சூடான நீரில் தான் குளிக்க வேண்டுமாம். அது ஏன் தெரியுமா?
Hot Water And Oil Bath In Tamil
தலைக்கு குளிக்கிறவர்கள் பச்சைத் தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். சூடான நீரில் குளிக்க கூடாது என்று ஆயுர்வேதம் சொல்லுகின்றது. ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கண்டிப்பாக பச்சை தண்ணீருக்கு பதிலாக சூடான நீரில் தான் குளிக்க வேண்டும் என்றும் ஆயுர்வேதம் சொல்லுகின்றது. ஏன் அப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Hot Water And Oil Bath In Tamil
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சூடான நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
ஆயுர்வேதத்தின்படி, எண்ணெய் தேய்த்து குளித்தால் சூடான நீரில் தான் குளிக்க வேண்டும். இது நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது. மேலும் இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கருதப்படுகிறது. என்னை மற்றும் சூடான நீர் உடலை திறம்பட உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.
நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சூடான நீரில் குளித்தால், வெந்நீரானது சருமத்தின் துளைகளை திறந்து எண்ணெய் உள்ளே ஊடுருவச் செய்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீரில் குளிக்கும் போது நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் பயன்படுத்திய எண்ணையின் நன்மைகளும் அப்படியே கிடைக்கும்.
இதையும் படிங்க: எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் 'எதை' செய்யக் கூடாது தெரியுமா? சூட்டை கிளப்பிடும்!!
Hot Water And Oil Bath In Tamil
மேலும் சூடான நீரில் குளிக்கும் போது உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும், பதட்டம் நீங்கும், மன அழுத்தம் குறையும் மற்றும் உடலை நிதானமாக வைக்கும். சொல்லப்போனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
சூடான நீர் குளியல் தசை மற்றும் மூட்டுகளை தளர்த்தும். எண்ணெய் குளியல் ஆனது உடல் வலிகள் மற்றும் அசதிகளை போக்கும். எண்ணெயுடன் சூடான நீரில் குளியலானது சருமத்தில் இருக்கும் வறட்சியை அகற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது. இது தவிர எண்ணெயில் இருந்து வரும் நறுமணம் உடலையும் மணக்க வைக்கும்.
இதையும் படிங்க: எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாள் எது? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Hot Water And Oil Bath In Tamil
எண்ணெய் குளியலுக்கு எந்த எண்ணெய் நல்லது?
ஆயுர்வேதத்தின் படி எண்ணை குளியலுக்கு எந்த எண்ணெய் நல்லது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் எண்ணெய் - உங்களுக்கு பித்தம் இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும் மற்றும் சருமத்திற்கு உணர்திறனை வழங்கும்.
நல்லெண்ணெய் - வாத பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் சிறந்தது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வறண்ட சருமத்தை நீக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய் - இந்த எண்ணை பித்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது. மேலும் இதை அனைவரும் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய் - இந்த எண்ணை கப உடம்புக்காரர்களுக்கு மிகவும் நல்லது.