சாப்பிட்டதும் வெறும் 100 அடிகள் நடைபயிற்சி.. அதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்ட பின்னரும் வெறும் 100 அடிகள் நடைபயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஆயுர்வேதம் என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மருத்துவ நடைமுறையாகும். ஆயுர்வேதம், மனம், உடல், ஆன்மா ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் படி.. சாப்பிட்ட பின்னர் 100 அடிகள் நடப்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
நீங்கள் சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமானத்தை மேம்படுத்தும். தினமும் உணவு செரிமானம் சீராக இருப்பது உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்தால் அஜீரணம், வீக்கம், வலி ஆகிய பல பிரச்சனைகள் குறையும். நடைபயிற்சி என்பது இலகுவான உடற்பயிற்சி.
நடைபயிற்சி நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு 100 அடிகள் நடப்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி தசைகளுக்கு குளுக்கோஸை எரிபொருளாகப் பயன்படுத்த உதவுகிறது. இரத்தச் சர்க்கரையின் அளவு உயர்வைக் குறைக்கிறது. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டதும் நடப்பது பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தம் இருப்பவர்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்காது. எப்போதும் சோர்வாக காணப்படுவார்கள். தினமும் நடைபயிற்சி செய்வதால் மனநிலையை மேம்படுத்துவதற்கு அவசியமான எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைத்தால் செரிமானம் மேம்படும். உடலும் ஆரோக்கியமாகும்.
ஆயுர்வேதத்தின் படி.. சாப்பிட்ட பிறகு 100 காலடிகள் நடப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. தூக்க கோளாறுகளை சரி செய்கிறது. உடலை ஓய்வில் வைத்திருக்கும். நிம்மதியாக தூங்க சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்யுங்கள்.