MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ஊறவைத்த உலர் திராட்சை உடல் சூட்டை தணிக்குமா? பலருக்கு தெரியாத நன்மை 

ஊறவைத்த உலர் திராட்சை உடல் சூட்டை தணிக்குமா? பலருக்கு தெரியாத நன்மை 

கோடைகாலத்தில் ஊறவைத்த உலர் திராட்சையை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காண்போம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : May 10 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Benefits of Eating Soaked Raisins in Summer

Benefits of Eating Soaked Raisins in Summer

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உண்பது அவசியம். ஏனென்றால் கோடையில் உடலில் அதிக அளவு நீரிழப்பு ஏற்படும். இதனால் சிலருக்கு மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  உடலில் ஏற்படும் அதிகப்படியான நீரிழப்பை தடுத்து உடலை நீரோட்டமாக வைத்திருக்க அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். இந்த பதிவில் ஊறவைத்த திராட்சையை உண்பதால் உங்களுடைய ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என காணலாம். 

27
ஊறவைத்த உலர் திராட்சை:

ஊறவைத்த உலர் திராட்சை:

ஊறவைத்த உலர் திராட்சையை உண்பது கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். திராட்சைக்கு சூடான தன்மை இருந்தாலும் அதை ஊற வைத்து உண்பதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். உடலில் இருக்கும் சூட்டை அதிகரிக்காது. உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடல் நீரோட்டமாக இருக்கும்.  செரிமானம் மேம்படவும் இது உதவுகிறது. 

Related Articles

Related image1
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?
Related image2
ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
37
எப்போது சாப்பிட வேண்டும்?

எப்போது சாப்பிட வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட வேண்டும்.  இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவிட்டு காலை உண்ணலாம். ஊற வைத்த தண்ணீரும் நல்லது. அதனையும் குடிக்கலாம்.

47
நீரேற்றம்:

நீரேற்றம்:

உடலில் சேரும் கழிவுகளை நீக்க உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது. நல்ல உணவுகள் தான் மருந்தாக அமையும்.  கோடைகாலத்தில் ஊறவைத்த திராட்சையை உண்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

57
செரிமானம்

செரிமானம்

கோடைகாலத்தில் பலர் மலச்சிக்கலால் அவதியறுவர்.  அவர்களுக்கு ஊறவைத்த உலர் திராட்சை தீர்வாக இருக்கும். திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமானம் மேம்படவும், மலச்சிக்கலை தடுக்கவும் உலர் திராட்சை ஊற வைத்து உண்ணலாம். அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. 

67
ஹீமோகுளோபின்:

ஹீமோகுளோபின்:

திராட்சையில் இரும்பு, தாமிரத்தின் அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அளவை உயர்த்தவும் உலர் திராட்சை உதவும். 

77
இதய ஆரோக்கியம்;

இதய ஆரோக்கியம்;

திராட்சையில் உள்ள பொட்டாசியம் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை ஊறவைத்து உண்ணலாம் ரத்த அழுத்தம் குறையும்போது இதய நோயின் அபாயமும் குறைகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
கோடைக்கால குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதய நோயாளிகளே... வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்!
Recommended image2
Now Playing
Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda
Recommended image3
Now Playing
கேழ்வரகு டார்க் பேன்டசி குக்கீஸ் ! | Ragi Dark fantasy style cookies | Easy school snacks recipe
Related Stories
Recommended image1
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?
Recommended image2
ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved