- Home
- உடல்நலம்
- உணவு
- Winter special sweet: குளிர் காலத்திற்கு ஏற்ற ஸ்வீட்... குழந்தைகளுக்கு கூட இதை சாப்பிட்டா கொடுக்கலாம்!
Winter special sweet: குளிர் காலத்திற்கு ஏற்ற ஸ்வீட்... குழந்தைகளுக்கு கூட இதை சாப்பிட்டா கொடுக்கலாம்!
Winter special sweet: குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கூட தைரியமாக சாப்பிட கொடுக்க கூடிய ஒரு ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த ஸ்வீட் லட்டு சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.

குளிர்காலத்திலும் சாப்பிடக்கூடிய இனிப்பு லட்டு
உண்ணக்கூடிய பாதாம் அல்லது முருங்கை பிசின், கோதுமை மாவு, நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் ஆகியவை சேர்க்கப்படுவதால் இது உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது. வறுத்த நட்ஸ், விதைகள் மற்றும் நெய்யின் கலவை இந்த லட்டுவிற்கு தனித்துவமான மணத்தையும் மொறுமொறுப்புத் தன்மையையும் தருகிறது. விசேஷ நாட்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சாதாரண நாட்களிலும் இதனை எளிதாகச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம்/ முருங்கை பிசின் - ½ கப்
கோதுமை மாவு - 1 கப்
பொடித்த வெல்லம் - ¾ கப்
நெய் - ½ கப்
பொடியாக நறுக்கிய பாதாம் - ¼ கப்
பொடியாக நறுக்கிய முந்திரி - ¼ கப்
நறுக்கிய பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன்
தாமரை விதை (மக்கானா) - ¼ கப்
துருவிய உலர் தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளரி விதை - 1 டேபிள்ஸ்பூன்
பிசின், நட்ஸ் மற்றும் விதைகளை வறுத்தல்
அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். உண்ணக்கூடிய பாதாம் அல்லது முருங்கை பிசினைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, அவை நன்கு பொரிந்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து தனியே எடுக்கவும். ஆறிய பிறகு, அதனை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது நெய் சேர்த்து பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் வெள்ளரி விதைகளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். பின்னர் தாமரை விதையை (மக்கானா) மொறுமொறுப்பாக வறுத்து, ஆறியதும் லேசாகப் பொடித்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு வறுத்தல்
மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, கோதுமை மாவைச் சேர்க்கவும். மாவு கருகாமல் இருக்க குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளறவும். மாவின் பச்சை வாசனை நீங்கி, பொன்னிறமாக மாறி நறுமணம் வீசும் வரை வறுப்பது அவசியம். வறுத்த மாவுடன் பொடித்த பிசின், வறுத்த நட்ஸ், மக்கானா, கசகசா, உலர் தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, கலவை கை பொறுக்கும் சூட்டிற்கு ஆறும் வரை காத்திருக்கவும்.
வெல்லம் சேர்த்து லட்டு பிடித்தல்
கலவை மிதமான சூட்டில் இருக்கும்போது பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்த லட்டு கலவை அதிக சூடாக இருக்கும்போது வெல்லம் சேர்த்தால் அது உருகி லட்டுவின் பதத்தை மாற்றிவிடும். கலவை இளஞ்சூடாக இருக்கும்போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். கலவை உதிரியாக இருந்தால் சிறிது சூடான நெய்யும், தளர்வாக இருந்தால் சற்று ஆறவிட்டும் உருண்டைகளாகப் பிடிக்கலாம். தயாரான லட்டுக்கள் முழுமையாக ஆறிய பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும். இந்த லட்டுவில் சத்தான பொருட்கள் இருந்தாலும், நெய், நட்ஸ் மற்றும் இனிப்பு அதிகம் உள்ளதால் கலோரி அளவு அதிகமாக இருக்கும். சர்க்கரை மற்றும் கலோரி அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோர், இதனை அளவோடு உட்கொள்வது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.














