ஸ்கூல் போற குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய '5' ஊட்டச்சத்து உணவுகள்!!
Child Nutrition Plan : பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய சில ஊட்டச்சத்து உணவுகளின் பட்டியல் இங்கே.
Diet plan for school going child in tamil
பொதுவாக குழந்தைகள் வளரும் வயது எதுவென்றால் அது பள்ளி செல்லும் வயது தான். இந்த பருவத்தில் தான் குழந்தைகள் சீக்கிரமாகவே வளர்ச்சி பெறுவார்கள். எனவே இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த பருவத்தில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிட்டால், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். இதுதவிர, அவர்களது எலும்புகள் மற்றும் தசைகளும் வலுவாக இருப்பது மட்டுமின்றி, நன்கு வளர்ச்சியும் அடையும். இதற்கு குழந்தைகளின் உணவு பட்டியலில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பது மிகவும் அவசியம். எனவே, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
Nutrition for school children in tamil
புரதம்:
புரதம் உடலில் திசுக்களில் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கோழி, மீன், முட்டை, பருப்பு, பன்னீர், பீன்ஸ் போன்றவற்றில் புரதம் அதிகமாக இருப்பதால், உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து உணவு பட்டியலில் இவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான கொழுப்புகள்:
குழந்தையின் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்பு மிகவும் அவசியம். அவகேடா, நட்ஸ்கள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், நெய் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!
Healthy eating habits for kids in tamil
கால்சியம்:
பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் தேவை என்பதால், உங்கள் குழந்தைகளின் உணவு பட்டியலில் கால் செய்திற்காக பால் பொருட்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட்டுகள்:
கார்போஹைட்ரேட்டுகள் முழு உடலுக்கும் தேவையான ஆற்றலை வாரி வழங்குகின்றது. உங்கள் குழந்தையின் உணவு பட்டியலில் கார்போஹைட்ரேட் சேர்க்க விரும்பினால் அவர்களுக்கு மைதா, பிரட், ஓட்ஸ், ரொட்டி போன்ற முழு தானியங்கள் உணவுகளை கொடுக்கவும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:
குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை என்பதால், இவை பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளன. எனவே அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு அதிகம் கொடுங்கள்.
Child nutrition plan in tamil
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவு முறை:
- குழந்தைகளுக்கு காலையில் சாப்பிடுவதற்கு இட்லி, தோசை, உப்புமா, கோதுமை பரோட்டா, முளைகட்டிய பயிறு, அவித்த முட்டை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுக்கலாம்.
- மதிய உணவாக காய்கறிகள் நிறைந்த சாதம், வெஜிடபிள் பிரியாணி கீரை, காலிஃப்ளவர், சப்பாத்தி, பருப்பு சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம்.
- ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக மில்க் ஷேக் மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்கலாம்.
- இரவு உணவிற்கு சப்பாத்தி, பாஸ்தா, வெஜிடபிள் கிச்சடி போன்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுங்கள்.
foods for school children in tamil
குறிப்பு : வயதிற்கு ஏற்றபடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். எனவே நீங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு நல்ல குழந்தை நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குளிர்காலத்துல குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுக்க கூடாது தெரியுமா?