உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!
Foods For Kids To Gain Weight : உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை மிகவும் குறைவாக இருந்தால், அதை நினைத்து கவலைப்படாமல், உணவில் சில மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியத்துடன் உடல் எடை அதிகரிக்கும்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எடை ரொம்பவே குறைவாக இருப்பதைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் உணவுகளை செய்து கொடுத்தாலும், குழந்தையின் எடையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், பார்ப்பதற்கு ஒல்லியாகவே இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகள் உணவில், இதுபோன்ற சிலவற்றை சேர்க்கவும். அதை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் எடை எளிதாக அதிகரிக்கும்.
வாழைப்பழம்: குழந்தைகளின் எடை அதிக வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி6, சி, இரும்பு, கல்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
kids eating
முட்டை: புரதத்தின் சிறந்த ஆதாரம் முட்டை. எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுக்கலாம். அதுமட்டுமின்றி இதில் நிறைவுற்ற கொழுப்பு புரதம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீங்கள் முட்டையில் வேறு ரெசிபிகள் செய்யக்கூட குழந்தைகள் சாப்பிடும் வகையில் செய்து கொடுக்கலாம்.
அவகேடோ: அவகேடோ குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே, குழந்தைகளுக்கு இந்த பழத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதில் வைட்டமின் சி, ஈ, கே, தாமிரம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருந்துள்ளது. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு பெரிதும் உதவுகிறது.
நெய்: குழந்தைகளின் எடை அதிகரிக்க நெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடிந்தால் குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யை கொடுங்கள். பருப்பு ,அரிசி போன்ற பல உணவுகளில் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். நெய்யில் வைட்டமின் ஏ, டி, கால்சியம், பாஸ்பரஸ், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
பருப்பு வகைகள்: புரத மெக்னீசியம் கால்சியம் இரும்பு சத்து நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இவற்றில் உள்ளது. எனவே, குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இவற்றை தினமும் அவர்களுக்கு கொடுக்கலாம்.