- Home
- உடல்நலம்
- Weaken Bones : இந்த உணவுகள் எலும்புகளுக்கு டேஞ்சர்!! எலும்பை விரைவில் பலவீனமாக்கும் சக்தி இருக்கு
Weaken Bones : இந்த உணவுகள் எலும்புகளுக்கு டேஞ்சர்!! எலும்பை விரைவில் பலவீனமாக்கும் சக்தி இருக்கு
எலும்புகளை பலவீனப்படுத்தும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.

Foods That Weaken Bones
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் மிக மிக அவசியம். உடலில் போதுமான அளவு கால்சியம் இல்லையென்றால் எலும்புகள் பலவீனமாகி மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதேசமயம் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும் சில உணவுகள் உள்ளன. அவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த பதிவில் எலும்புகளை வலுவிழக்க செய்யும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
உப்பு
'உப்பில்லா பண்டம் குப்பைக்கு சமம்' என்பார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால் உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி, எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்க செய்யும். உப்பில் இருக்கும் சோடியமானது எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, எலும்புகளை பலவீனமாக்கும்.
அதிக இனிப்புகள் மற்றும் சர்க்கரை :
அதிக இனிப்பு மற்றும் சர்க்கரை சாப்பிடுவது எலும்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் எலும்புகளிலிருந்து கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலவீனமடைகின்றன. எனவே அளவோடு இனிப்புகளை சாப்பிடுங்கள்.
சோடா பானங்கள் :
சோடா பானங்கள் மற்றும் செயற்கை குளிர் பானங்களை அதிகமாக குடித்தால் எலும்பு ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். ஏனெனில் அந்த பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளன. அது உடலில் இருக்கும் ஆற்றலை பாதிக்கும். இதனால் எலும்புகள் பலவீனமாகும்.
காஃபின் :
டீ, காபி மற்றும் சில ஆற்றல் பானங்களில் அதிக அளவு காஃபின் உள்ளன. அளவுக்கு அதிகமாக காஃபின் எடுத்துக் கொண்டால் அது எலும்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதாவது காஃபின் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் கால்சியம் உறிஞ்சும் சக்தி பாதிக்கப்படும். இதனால் எலும்புகள் ஆரோக்கியமாக மோசமாக பாதிக்கப்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் :
பீட்சா, பர்கர்கள், பொரித்த உணவுகள் மற்றும் பிற துரித உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றை முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றால், சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
மதுபானம் :
மதுபானம் உடலிலிருந்து கால்சியத்தை உறிஞ்சி எலும்புகளை பலவீனப்படுத்தி, எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்க செய்யும்.