- Home
- உடல்நலம்
- Diabetes : அதிக சத்துக்கள் இருந்தாலும் டேஞ்சர்தான்! சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள் லிஸ்ட்
Diabetes : அதிக சத்துக்கள் இருந்தாலும் டேஞ்சர்தான்! சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள் லிஸ்ட்
உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உலர் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? ஏன் சாப்பிடக்கூடாது என்று இங்கு காணலாம்.

Dry Fruits for Diabetes
நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது என்பதால், தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் நட்ஸ்கள் சாப்பிடலாம், ஆனால், உலர் பழங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில் சில உலர் பழங்கள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அவை கிளைசெமிக் குறியீட்டை அதிகரிக்கச் செய்யும். இதனால் இரத்த சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் என்னென்ன உலர் பழங்களை சாப்பிடக் கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் :
பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் இவை இரண்டிலும் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
உலர் செர்ரி மற்றும் பெர்ரி வகைகள் :
பொதுவாக செர்ரி மற்றும் பெர்ரி வகைகள் அந்தந்த சீசனில் மட்டும்தான் கிடைக்கும். இதனால் அவற்றை உலர் பழங்களாக வாங்கி விற்கிறார்கள். ஆனால் இவற்றில் கிளைசெமிக் குறியீடு ரொம்பவே அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
உலர் வாழைப்பழம் :
ஃபிரெஷ்ஷான வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் சிலர் உலர் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட விரும்புவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை கட்டாயம் வாங்கி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் கிளைசெமிக் குறியீடு மிகவும் அதிகமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் கலோரிகளும் அதிகமாக உள்ளன.
இவற்றையும் சாப்பிடாதீங்க!
பப்பாளி, ஆரஞ்சு பழங்களை சர்க்கரை பாகில் ஊற வைத்து மிட்டாய் போல மாற்றி விற்பார்கள். ஆனால் இதில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை வெறும் சர்க்கரை மற்றும் கலோரிகள் மட்டும்தான் இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.