- Home
- உடல்நலம்
- Belly Fat : என்ன பண்ணாலும் தொப்பைக் குறையலயா? இந்த 6 பானங்கள் தான் காரணம்... உடனே விடுங்க
Belly Fat : என்ன பண்ணாலும் தொப்பைக் குறையலயா? இந்த 6 பானங்கள் தான் காரணம்... உடனே விடுங்க
தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் ஒருபோதும் குடிக்கவே கூடாத சில பானங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Drinks That Cause Belly Fat
தொப்பை என்பது வயிற்று சுற்றி கொழுப்புகள் சேர்க்கப்படுவதாகும். தொப்பை வந்துவிட்டாலே அதை குறைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். தொப்பை உருவாவதற்கு முக்கிய காரணங்கள் மரபணுக்கள், ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுதல் போன்றவை இதில் அடங்கும். தொப்பையை குறைக்க வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. சில பானங்கள் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எனர்ஜி பானங்கள் மற்றும் சோடாக்கள் :
எனர்ஜி டிரிங்க்ஸ் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனால் இதில் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளதால் அவை தொப்பையை அதிகரிக்கும். சோடாக்களிலும் சர்க்கரை அதிக அளவு உள்ளன. அவையும் தொப்பையை அதிகரிக்க செய்கிறது.
ஸ்வீட் காபிகள்
தற்போது Caffe Mocha, Vanilla Latte கொஞ்சம் பல ஃப்ளேவர்களில் காபி வகைகள் உள்ளன. அவற்றில் கலோரிகள் மற்றும் விப்பிங் கிரீம் அதிகமாக இருப்பதால் கொழுப்பு நிறைந்த பானமாக கருதப்படுகிறது. இவற்றை அதிகமாக குடித்தால் உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பை வருவதற்கு வழிவகுக்கும்.
கொம்புச்சா
புளிக்க வைக்கப்பட்ட தேநீர் என்று அழைக்கப்படும் கொம்புச்சாவில் இருக்கும் சர்க்கரை ஆனது ஈஸ்ட் கலோரி அளவு மற்றும் பாக்டீரியாவை அதிகப்படுத்தும். இந்த பானம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் இதில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதால் தொப்பையை உருவாக்கும்.
ஸ்மூத்திகள்
ஸ்மூத்திகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றில் பால், தயிர், சர்க்கரை பெர்ரிகள், வாழைப்பழம் போன்றவை சேர்க்கப்படுகிறது. சில ஸ்மூத்தி வகைகளில் தேன், ஐஸ்கிரீம் மற்றும் பிற செயற்கை இனிப்புகளும் சேர்க்கப்படுகிறது. இதனால் அவை கொழுப்பு நிறைந்த பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இப்படி கொழுப்பு நிறைந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை வருவதற்கு வாய்ப்பு உள்ளன.
ஆல்கஹால்
இது கலோரிகள் நிறைந்த பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக பீர், ஒயின் போன்றவற்றில் கலோரிகள் உள்ளடக்கம் அதிகமாக உள்ளன. அவற்றை அதிகமாக குடித்தால் செரிமான செயல்முறையானது பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், வயிற்று உப்புசம் மற்றும் தொப்பையை ஏற்படுத்தும்.
ஐஸ்கிரீம் மற்றும் மில்க் ஷேக்ஸ்
ஐஸ்கிரீம் மற்றும் மில்க் ஷேகுகளில் கலோரிகள் மற்றும் இனிப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை தொப்பையை அதிகரிக்கும்.