அன்லிமிடெட் பலன்களை உடலுக்கு அள்ளித் தரும் அஸ்வகந்தா!
அஸ்வகந்தா மூலிகையில் கிடைக்கும் மகத்துவமான மருத்துவ பலன்களை குறித்து தெரிந்து கொண்டால், பல பயன்களை பெறலாம்.
Image: Freepik
டிவி விளம்பரங்களில் தான் பெரும்பாலானோர் அஸ்வகந்தா மூலிகையின் பெயரை கேட்டிருப்பார்கள். இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான மூலிகை இது. அஸ்வகந்தாவின் வேர், பழங்கள் மருத்துவத்தில் உபயோகம் செய்யப்படுகிறது. 'அஸ்வகந்தா' எனும் வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இதற்கு "குதிரை & வாசனை" என்பது பொருள். என்பதாகும். இது அந்த மூலிகையின் நறுமணம், செயல்படும் ஆற்றலை குறிப்பதாக கூறப்படுகிறது. அஸ்வகந்தா மூலிகை நம்முடைய பல நோய்களை குணப்படுத்துவதோடு, மன நலனையும் மேம்படுத்துகிறது.
அஸ்வகந்தா மூலிகை நமது அறிவாற்றல், நினைவாற்றலை முன்னேற்றம் காண செய்கிறது. அண்மையில் வெளியான நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வில், அஸ்வகந்தா மூலிகை பங்கேற்பாளர்களின் கவனத்தை அதிகரித்தது, நினைவாற்றாலையும் மேம்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
தோல் வியாதிகளை போக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. நம்முடைய சருமத்தில் இருக்கும் கொலாஜன் அளவை கூட்டுகிறது, இதனால் தோல் புத்துயிர் பெறும். தொடர்ச்சியான முடி உதிர்தல் பிரச்சினையை அஸ்வகந்தா கட்டுப்படுத்துகிறது. மெலனின் இழப்பிலிருந்தும் நம் கூந்தலை அஸ்வந்தா பாதுகாத்து, முடி வேர்களை பலப்படுத்தும் என கூறப்படுகிறது.
நாள்தோறும் ஒரு கப் அஸ்வகந்தா தூள் சேர்த்த டீ குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். இதய தமனிகளில் உள்ள ரத்தகுழாய்களில் அடைப்புகள் உருவாவதை தடுக்க அஸ்வகந்தா உதவுகிறது. நம் உடல் உழைப்பின் போது இதயம், நுரையீரல் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்வதை அஸ்வகந்தா ஊக்குவிக்கிறது.
அஸ்வகந்தா மூலிகை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு அஸ்வகந்தா ஏற்ற மூலிகையாகும். சில ஆய்வுகள் மூலம் அஸ்வகந்தா இரத்த குளுக்கோஸ், லிப்பிட் அளவை குறைக்கும் என்பது தெரியவந்துள்ளது. அஸ்வகந்தாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் இருப்பதால், உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க முடியும்.
அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்கும். மனச்சோர்வு, பதட்டம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அஸ்வகந்தா மூலிகையை அடிக்கடி எடுத்து கொள்ளலாம். பைட்டோமெடிசின் எனும் இதழில் வந்த ஆய்வில் அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கருவில் குழந்தை மூளை வளர்ச்சி தூண்டும் வளையல், கர்ப்பிணிக்கும் வளைகாப்புக்கும் உள்ள அறிவியல் தொடர்பு தெரியுமா
இதையும் படிங்க: மறந்தும் பாலுடன் இந்த உணவை சாப்பிட வேண்டாம்.. ஆபத்து நிறைந்த இந்த உணவு காம்பினேஷன் குறித்து தெரியுமா?