MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கருவில் குழந்தை மூளை வளர்ச்சி தூண்டும் வளையல், கர்ப்பிணிக்கும் வளைகாப்புக்கும் உள்ள அறிவியல் தொடர்பு தெரியுமா

கருவில் குழந்தை மூளை வளர்ச்சி தூண்டும் வளையல், கர்ப்பிணிக்கும் வளைகாப்புக்கும் உள்ள அறிவியல் தொடர்பு தெரியுமா

ஜோதிட சாஸ்திரத்தின் படி வளையல்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவை. இதை அணிவதல் நன்மைகளை இங்கு காணலாம்.  

2 Min read
Author : maria pani
| Updated : Feb 06 2023, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திருமணமான பெண்கள் தினமும் வளையல் அணிய வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. கண்ணாடி முதல் தங்கள் வளையல்கள் வரை பெண்களுக்கு எல்லா வளையல்களும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா? ஆம், ஆரோக்கியம், ஜோதிட ரீதியாக வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை அனுபவிக்க முடியும். அதை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்து மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருந்தால் அது அசுபமாக சொல்லப்படுகிறது. வளையல் அணியாத பெண்கள் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கிறார்களாம். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையை மட்டுமில்லால், குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள் என்கிறது இந்து சாஸ்திரம். ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் தொடர்ந்து வளையல் அணியும்போது மொத்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையும் மேம்படும்.  

இரத்த ஓட்டம் மேம்படும் 

பெண்கள் மணிக்கட்டில் வளையல்களை அணிவதால் உராய்வு ஏற்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்பு குறையும். 

35

கர்ப்பிணிகளுக்கு வளையல்  

கர்ப்பிணிகள் தங்களுடைய ஏழாவது மாதத்திற்கு பிறகு வளையல் அணிய பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தைக்கு 7 மாதத்திற்கு பிறகே மூளை செல்கள் உருவாகும். அப்போதுதான் அந்த குழந்தை, பல்வேறு வகையான ஒலிகளை அடையாளம் காணத் தொடங்கும். வளையல்களின் சத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. விரைவில் தாயாகப் போகும் தாய்க்கும் வளையல்கள் நன்மை பயக்கும். கர்ப்பிணியின் மன அழுத்தத்தை போக்கி மனதை சாந்தமாக்கும். அதனால் தான் கர்ப்பத்தின் 5 அல்லது 7வது மாதங்களில், சாஸ்திரம் என்ற பெயரில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. 

45

வளையல்களை அணியும் பெண்களுக்கு மற்ற பெண்களைவிட குறைந்த சோர்வு, உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை ஆய்வுகளும் கூறுகின்றன. வளையல்களின் நேர்மறை ஆற்றல் உடல்நலப் பிரச்சனைகளைத் தடுப்பதாக நம்பப்படுகிறது. வளையல்கள் அணிவது இல்லற வாழ்க்கையை மேம்படுத்துகிறது. ஒரு பெண் வளையல் அணிவதால் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுகிறது. கணவனுடன் நெருக்கம் அதிகம் ஆகிறது. 

வலது கையில் வளையல்கள் அணிவது அலங்காரம் மட்டுமில்லை, ஜோதிடரீதியாக செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. உங்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் கட்டாயம் வளையல் அணிய வேண்டும். இது அந்த கிரகத்தை வலுப்படுத்த உதவும். நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ இது உதவுகிறது.

 

55

கண்ணாடி வளையல்களின் நன்மைகள் 

பெண்களுக்கு நேர்மறை ஆற்றலை அளிக்கின்றன. கண்ணாடி வளையல்கள் சுற்றுப்புறத்திலிருந்து நேர்மறை ஆற்றலை உறிஞ்சி எதிர்மறை ஆற்றலை நீக்க உதவுகின்றன. கண்ணாடி வளையல்களின் சத்தம் பெண்களின் மனநிலையை அமைதியாக வைக்கும். 

வளையல்களின் நிறம் 

வளையல்களில் சிவப்பு, பச்சை நிறங்கள் மிகவும் மங்களகரமான நிறங்கள். சிவப்பு, பச்சை வளையல்கள் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும். இந்த நிறங்களை திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்பது ஜோதிட விதி. 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology Tamil: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு.! பெரிய கண்டத்தில் சிக்கும் 4 ராசிகள் இவைதான்.!
Recommended image2
இந்த 5 தெய்வங்கள் கனவில் வந்தால்... உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது
Recommended image3
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்.! சகோதர பகை தரும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved