MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Ezharai Sani: ஒருவருக்கு வாழ்க்கையில் எத்தனை முறை ஏழரை சனி வரும்? அதிர்ச்சி தரும் ஜோதிட உண்மைகள்.!

Ezharai Sani: ஒருவருக்கு வாழ்க்கையில் எத்தனை முறை ஏழரை சனி வரும்? அதிர்ச்சி தரும் ஜோதிட உண்மைகள்.!

Different Types of Elarai Sani in Tamil: ஜோதிடத்தின் படி ஒருவரை எத்தனை முறை ஏழரை சனி பிடிக்கும்? மங்கு சனி, பொங்கு சனி, அந்திம சனி என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Aug 05 2026, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Different Types of Elarai Sani in Tamil ஒருவரை எத்தனை முறை ஏழரை சனி பிடிக்கும்?
Image Credit : Gemini AI

Different Types of Elarai Sani in Tamil - ஒருவரை எத்தனை முறை ஏழரை சனி பிடிக்கும்?

வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கர்ம வினைகளை அளிக்கும் நீதிமானாக விளங்குகிறார். சனி பகவான் என்றாலே பலருக்கும் பயம் ஏற்படுவது உண்டு. சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க 2½ ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். ஏழரை சனி என்பது ஒருவர் பிறந்த ராசிக்கு முந்தைய ராசி (2½ ஆண்டுகள்), ஜென்ம ராசி (2½ ஆண்டுகள்), பிந்தைய ராசி (2½ ஆண்டுகள்) ஆகிய மூன்றிலும் சனி பயணிக்கும் மொத்த 7½ ஆண்டுகள் கொண்ட காலக்கட்டமாகும்.

இதையும் படியுங்கள் -  மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
சனி பெயர்ச்சியின் வகைகள்
Image Credit : Gemini AI

சனி பெயர்ச்சியின் வகைகள்

12 ராசிகளையும் கடந்து மீண்டும் அதே ராசிக்கு சனி பகவான் வர சுமார் 30 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஏழரை சனி சுழற்சி முறையில் மீண்டும் வரும். இதன் அடிப்படையில் ஏழரை சனி மூன்று சுற்றுகளாக பிரிக்கப்படுகிறது. முதல் சுற்று ‘மந்தாரை அல்லது மங்கு சனி’ என்றும், இரண்டாம் சுற்று ‘பொங்கு சனி’ என்றும், மூன்றாம் சுற்று ‘மரண சனி அல்லது அந்திம சனி’ என்றும், நான்காம் சுற்று அபூர்வ சுற்றாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுகள் குறித்தும், அது எப்போது ஏற்படும் என்பது குறித்தும், கீழே விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!

Related Articles

Related image1
Astrology: மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
Related image2
Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!
37
முதல் சுற்று (மந்தாரை அல்லது மங்கு சனி)
Image Credit : Asianet News

முதல் சுற்று (மந்தாரை அல்லது மங்கு சனி)

முதல் சுற்று ‘மந்தாரை அல்லது மங்கு சனி’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் வரும். இது ராசிக்காரர்களை காட்டிலும் பெற்றோர்களை அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு படிப்பில் சிறு தடங்கல்களை ஏற்படுத்தும். 30 வயதிற்குள் வரும் இதை முதல் சுற்றாக கருதலாம். குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் சிதறுதல், மந்தமான நிலை, உடல் நலக் கோளாறுகள், பெற்றோருக்கு தொல்லைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள் -  புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!

47
இரண்டாவது சுற்று (பொங்கு சனி)
Image Credit : Asianet News

இரண்டாவது சுற்று (பொங்கு சனி)

இரண்டாவது சனி ‘பொங்கு சனி’ என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது 30 வயது முதல் 60 வயதிற்குள் ஏற்படும். இது மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும். தொழில், குடும்பம், பொருளாதாரம் சார்ந்த கடுமையான உழைப்புகளையும், சோதனைகளையும் தரும். இருப்பினும் பொங்கு சனி என்பதால் பல போராட்டங்களுக்குப் பிறகு நன்மைகளும், சமூகத்தில் நிலையான இடத்தையும், தொழில் வளர்ச்சியையும் வழங்கிச் செல்லும். பொங்கு சனி என்பது சவால்களை கொடுத்தாலும் அனுபவ அறிவைத் தந்து வாழ்வில் வெற்றி பெறச் செய்யும்.

இதையும் படியுங்கள் - 71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!

57
மூன்றாம் சுற்று (மரண சனி அல்லது அந்திம சனி)
Image Credit : Asianet News

மூன்றாம் சுற்று (மரண சனி அல்லது அந்திம சனி)

மூன்றாம் சுற்று ‘மரண சனி அல்லது அந்திம சனி’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காலம் 60 வயது முதல் 90 வயதிற்குள் வரும். வயோதிக காலத்தில் வரும் இந்த சுற்று உடல் ரீதியான உபாதைகள், மருத்துவச் செலவுகள், மனரீதியான பற்றற்ற தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும். ஆயுள் பலம் குறைவாக இருப்பவர்களுக்கு இது ஆயுள் முடிவையும் குறிக்கும். முதுமை பருவத்தில் வரும் இந்த சுற்றில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இறுதி கால சவால்களும் அதிகரிக்கக்கூடும்.

இதையும் படியுங்கள் -  பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!

67
நான்காம் சுற்று (அபூர்வ சுற்று)
Image Credit : AI Generated

நான்காம் சுற்று (அபூர்வ சுற்று)

நான்காம் சுற்று அபூர்வ சுற்றாகும். 90 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். இதன் தாக்கம் முற்றிலும் ஆன்மீக ஈடுபாடு, உளவியல் பற்றுகளில் இருந்து விடுதலை மற்றும் பூரண ஓய்வைக் குறிக்கும். அரிதாக 90 வயது முதல் 100 வயது வரை நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்களுக்கு இந்த நான்காம் சுற்று வர வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் -  உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!

77
முக்கிய குறிப்பு
Image Credit : Asianet News

முக்கிய குறிப்பு

இருப்பினும் ஜோதிட ரீதியாக மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கும் ஏழரை சனியின் பொதுவான எண்ணிக்கை 3 முறை ஆகும் ஏழரை சனியின் தாக்கம் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் இருக்கும் இடம், ஆட்சி பெற்ற இடம், உச்ச பலம், தசா புத்திகள் மற்றும் பிற கிரகங்களின் பார்வையைப் பொறுத்து மாறுபடும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
சனிப்பெயர்ச்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
Recommended image2
Astrology: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய கிரக சேர்க்கை.! விசாகம் முதல் ரேவதி வரை 14 நட்சத்திரங்களுக்கான விரிவான பலன்கள் & பரிகாரங்கள்
Recommended image3
Nava Panchama Raja Yoga : செவ்வாய் பெயர்ச்சியால் உருவான நவ பஞ்சம ராஜ யோகம்... நான் ஸ்டாப் பலன்களை பெறப்போகும் 4 ராசிகள்
Related Stories
Recommended image1
Astrology: மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
Recommended image2
Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved