இட்லியை புஸ்ஸுன்னு வர்ரதுக்கு மாவில் பேக்கிங் சோடா யூஸ் செய்தால் இந்த பிரச்சனைகளும் ஃபிரீயாவே வந்துரும் !
பேக்கிங் சோடாவை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்னவென்று இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக பேக்கிங் சோடாவை கேக், ரொட்டிகள்,பிஸ்கட்கள், வடை மற்றும் இட்லி போன்றவை சாஃப்ட்டாக வருவதற்கு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். பேக்கிங் சோடா உபயோகப்படுத்தினால் நன்றாக புஸ்ஸுன்னு உப்பி வருவதற்கு இதனை ஹோட்டல் மற்றும் வீட்டு சமையலில் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி அடிக்கடி சேர்க்கப்படும் சிட்டிகை அளவிலான பேக்கிங் சோடாவால் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று தெரியுமா? இதனை தொடர்ந்து உபயோகித்தால் பல்வேறு தீங்குகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கையாகவே சோடா பைகார்ப் காரத் தன்மை கொண்டது. தவிர இரத்தத்தின் காரத் தன்மையை மாற்றுகிறது. அதே நேரத்தில் இதன் pH-ல் ஏதேனும் மாற்றம் ஏற்படின் உடல் பல்வேறு கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
காரத்தன்மை அதிகரித்தால் வளர்சிதை மாற்ற அல்கலோசிஸ் உண்டாகலாம். இந்த நிலையால் சிறுநீரக செயல்பாட்டில் கூட பாதிப்பு ஏற்படலாம். இதனை நீண்ட காலமாக பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற நாட்பட்ட நோய்களை ஏற்படுத்தும்.மேலும், சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றம் மற்றும் தசை உடலியல் ஆகியவற்றையும் பாதிக்கலாம்.
பேக்கிங் சோடாவைப் சோடியம் பைகார்பனேட் என்று .கூறுவார்கள்.உலக சுகாதார அமைப்பு இதனை மிக குறைந்த அளவில் மட்டுமே உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதிகமாகவோ அல்லது தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பல்வேறு வகையில் அது நம் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தும். பேக்கிங் சோடாவை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்னவென்று இந்த பதிவில் காணலாம்
பேக்கிங் சோடாவை உணவில் சேர்ப்பதால், பொதுவான பக்க விளைவுகளில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. இதிலிருக்கும் ஆன்டாக்சிட்களும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை குறைக்கிறது இதனால் பாக்டீரியா தொற்று மற்றும் ஒவ்வாமை போன்ற எதிர் விளைவுகள் உண்டாக்க செய்கின்றன . தொடர்ந்து பேக்கிங் சோடாவை உணவில் எடுத்துகே கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு/ மற்ற நாட்பட்ட ஆபத்தான நோய்களையும் உண்டாக்கும்
பேக்கிங் சோடாவுக்கு எந்த ஒரு தனிப்பட்ட ஊட்டச்சத்து மதிப்பு கிடையாது. இதில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் வயிற்றில் இருக்கும் அமிலத்துடன் தொடர்பு கொண்டு செரிமானத்தை மட்டுப்படுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைதயும் தடுக்கிறது. நமது உணவு சீராக ஜீரணிக்க முடியாமல் போனால், அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் குறிப்பாக உடல் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படும்.
பேக்கிங் சோடா நுகர்வினால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. இந்த காரணத்தினால் 15 - 20 நிமிடங்களுக்குள், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் தவிர கல்லீரல் சர்க்கரையை கொழுப்பாக மாற்றும் . பேக்கிங் சோடாவில் இருக்கும் பாஸ்போரிக் ஆசிட் எலும்புகளுக்கு பாதிப்பை உண்டாகும். சோடா நுகர்வு கால்சியத்தை உறிஞ்சுவதால் உடலின் செயல் திறனில் தலையிடும் அதோடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை ஏற்பட வழிவகுக்கிறது. ஆகையால் பேக்கிங் சோடா சேர்த்து உணவை புளிக்க வைப்பதற்குப் பதிலாக ஒரு நாள் முன்பே மாவை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது