Women and Coffee : பெண்களே! இந்த நேரத்துல காபி குடிக்காதீங்க! ரொம்ப டேஞ்சர்
எந்தெந்த நேரத்தில் பெண்கள் காபி குடிக்க கூடாது? அப்படி குடித்தால் என்ன ஆகும்? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Women and Coffee
பொதுவாகவே காலையில் எழுந்ததுமே ஒரு கப் சூடான காபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். அதன் வாசனை மற்றும் சுவைக்கு நம்மில் பலரும் அடிமையே. காலையிலேயே காபி குடிப்பது நம்மை சுறுசுறுப்பாக மாற்றி, மூளையை உஷார்ப்படுத்தி, ஒருவித புத்துணர்ச்சியை நமக்கு வழங்கும்.
Coffee and Women’s Health
காபியை அளவோடு குடித்தால் நன்மைகள் உண்டு. அதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களின் ஆரோக்கியத்திற்கு அது சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்களுக்கு தான் ஹார்மோன் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் சில நேரங்களில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் :
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த சமயத்தில் சாப்பிடும் மற்றும் குடிக்கும் என எதுவாக இருந்தாலும் அது அவர்களது நச்சுக்கொடி வழியாக குழந்தைக்கும் சென்றடையும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் காபி குடித்தால் அதிலிருக்கும் காஃபின் கருச்சிதைவு அபாயத்தை ஏற்படுத்தும் அல்லது குறைந்த எடையில் குழந்தை பிறக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் :
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காஃபின் தாய் பால் வழியாக குழந்தைக்கு செல்லும். பச்சிளம் குழந்தையின் உடலால் அந்த காஃபினை ஜீரணிக்கவோ அல்லது சரியாக வெளியேற்றது முடியாமல் போகும். இதன் விளைவாக குழந்தைகள் நாள் முழுவதும் சரியாக தூங்க முடியாது மற்றும் காரணமில்லாமல் அழுதும்.
மாதவிடாய் கால பிரச்சினைகள் :
மாதவிடாய் சமயத்தில் பல பெண்கள் சோர்வாக மற்றும் எரிச்சலாக உணர்வார்கள். அந்த சமயத்தில் சூடாக ஒரு கப் காபி குடித்தால் இதமாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் காபியில் இருக்கும் காஃபின் மாதவிடாய் மன அழுத்த அறிகுறிகளை மேலும் மோசமாக்கும். எரிச்சல் மற்றும் பதக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
மாதவிடாய் நிற்கும் சமயம் :
இது பெண்களின் வாழ்க்கையில் நிகழும் மற்றொரு முக்கியமான ஹார்மோன் மாற்றமாகும். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு திடீர் உடல் சூடு பிடித்தல், இரவில் தூங்கும் போது வியர்த்தல் மற்றும் மோசமான தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு காபியில் இருக்கும் காஃபின் தான் காரணமாகும்.
இரத்த சோகை
பல பெண்கள் இது பிரச்சினையினால் அவதிப்படுகிறார்கள். காபியில் இருக்கும் டானின்கள் என்னும் ஒரு வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை நம் உடலானது உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. இதன் விளைவாக தான் இரத்த சோகை ஏற்படுகிறது.