MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Health Tips: உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்

Health Tips: உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்

அடிக்கடி சோர்வாகவும் எனர்ஜி இல்லாமலும் உணர்கிறீர்களா? டீ, காபி தரும் தற்காலிக சுறுசுறுப்பை விட, நாள் முழுவதும் உங்களை எனர்ஜியோடு வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ. சோர்வை நீக்கி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Jun 08 2026, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சியா விதை மற்றும் எலுமிச்சை :
Image Credit : Getty

சியா விதை மற்றும் எலுமிச்சை :

சியா விதைகள் (Chia seeds) உடலுக்கு மெதுவான, நிலையான ஆற்றலைத் தரும். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஊற வைத்து, அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென உயராமலும் குறையாமலும் பார்த்துக் கொள்ளும். இதனால் நாள் முழுக்க சோர்வே வராது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முளைகட்டிய கொள்ளு சுண்டல் :
Image Credit : Getty

முளைகட்டிய கொள்ளு சுண்டல் :

"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு" பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, கொள்ளு குதிரை வேகத்தில் நம்மை ஓட வைக்கும் எனர்ஜி பூஸ்டர். வாரத்தில் இரண்டு நாள் முளைகட்டிய கொள்ளுவை லேசாக அவித்து சுண்டலாகச் சாப்பிடுங்கள். இதில் இருக்கும் இரும்புச்சத்தும் புரதமும் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து, தசைகளுக்கு அசுர வேக சுறுசுறுப்பைத் தரும்.

Related Articles

Related image1
Health Guide: கீரையை விட அதிக இரும்புச்சத்து கொண்ட 8 சைவ உணவுகள்! இவ்ளோ இருக்கா?!
Related image2
Heart Health: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 8 சூப்பர் பழங்கள்!
35
பூசணி விதை ஸ்நாக்ஸ் :
Image Credit : Getty

பூசணி விதை ஸ்நாக்ஸ் :

மாலை நேரத்தில் வடை, பஜ்ஜி சாப்பிட்டு உடம்பை மந்தமாக்குவதற்குப் பதிலாக பூசணி விதைகளை ட்ரை பண்ணுங்க. வறுத்த பூசணி விதைகளை உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள். பசிக்கும் போது ஒரு கைப்பிடி சாப்பிடுங்கள். இதில் அதிகப்படியான மெக்னீசியம் உள்ளது. உடலில் மெக்னீசியம் குறைந்தால் தான் பயங்கர சோர்வு ஏற்படும். இதைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மூளை சுறுசுறுப்பாகிவிடும்.

45
இளநீர் மற்றும் புதினா:
Image Credit : Getty

இளநீர் மற்றும் புதினா:

வெயிலோ, வேலையோ... உடல் டயர்ட் ஆகும் போது பாக்கெட் ஜூஸ் குடிக்காதீங்க. இயற்கையான இந்த காம்போவை ட்ரை பண்ணுங்க. இளநீரில் 4 புதினா இலைகளை நசுக்கிப் போட்டு, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து குடியுங்கள். இளநீரில் உள்ள பொட்டாசியம் உடலின் எலக்ட்ரோலைட் அளவைச் சீராக்கும், புதினா இலைகளின் வாசனை மூளையை உடனடியாக அலர்ட் ஆக்கும். இன்ஸ்டன்ட் எனர்ஜி கேரண்டி!

55
கசப்பு இல்லாத டார்க் சாக்லேட் மற்றும் பாதாம் :
Image Credit : Getty

கசப்பு இல்லாத டார்க் சாக்லேட் மற்றும் பாதாம் :

சுறுசுறுப்பாக இருக்க ஸ்வீட் சாப்பிடக் கூடாது, ஆனா கசப்பான சாக்லேட் சாப்பிடலாம்! 70% மேல் உள்ள டார்க் சாக்லேட் ஒரு துண்டுடன், 4 பாதாம் பருப்பைச் சேர்த்து மென்று சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட்டில் உள்ள 'தியோப்ரோமைன்' (Theobromine) என்ற சத்து காபியை விட ஆபத்தில்லாத, நீடித்த சுறுசுறுப்பைத் தரும். பாதாம் பருப்பு அதற்குத் தேவையான நல்ல கொழுப்பை உடலுக்குக் கொடுக்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
உணவு
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Recommended image2
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image3
Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
Health Guide: கீரையை விட அதிக இரும்புச்சத்து கொண்ட 8 சைவ உணவுகள்! இவ்ளோ இருக்கா?!
Recommended image2
Heart Health: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 8 சூப்பர் பழங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved