MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காற்று மாசுப்பாட்டில் இருந்து நுரையீரலை பாதுகாக்கும் யோகாசனங்கள்..இன்று முதல் தினமும் காலையில் செய்யுங்கள்..!

காற்று மாசுப்பாட்டில் இருந்து நுரையீரலை பாதுகாக்கும் யோகாசனங்கள்..இன்று முதல் தினமும் காலையில் செய்யுங்கள்..!

தீபாவளி காற்று மாசுப்பாட்டில் இருந்து உங்கள், நுரையீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில யோகா ஆசனங்களை இங்கு காணலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 26 2022, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தீபாவளி முடிந்துவிட்ட நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. தடைகளை தாண்டியும், நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்ததால் பல்வேறு பகுதிகள் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது.

27

ஒரு நாளைக்கு 16 சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்து இருப்பமோ, அந்தளவிற்கு சென்னைவாசிகள் நேற்று நச்சுப்புகையை சுவாசித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதில் இருந்து உங்கள், நுரையீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில யோகா ஆசனங்களை இங்கு காணலாம்.

 

37

சுவாசப் பயிற்சி:

அதில் ஒன்று தான் ரூல் ஆஃப் த்ரீஸ் (Rule of threes).இது ஒரு சுவாசப் பயிற்சி ஆகும். இதன் கீழ் நீங்கள் மூன்று முறை ஆழமாக சுவாசிக்க வேண்டும், பின்னர் மூன்று முறை இரும வேண்டும் மற்றும் இதை மூன்று முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.மேலும் படிக்க...Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

47

கடைபிடிப்பது எப்படி?

முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.

பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, மூன்று முறை வலிமையாக இரும வேண்டும். இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.
 

57

புஜங்காசனம்:

இந்த ஆசனம், நமது நுரையீரலை நீட்டி நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குப்புறப்படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து, கைகளை தோள்பட்டைக்குக் கீழே ஊன்றி மேலே அண்ணாந்து பார்த்து மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல், மூன்று முறை செய்ய வேண்டும். இது, முதுகில் உள்ள தசைகளை வலுபெறச் செய்வதில் முக்கியமானவை.

மேலும் படிக்க...Health drink: பெண்கள் எலும்புகளை பாதுகாக்க தினமும் பாலில்..1 டீஸ்புன் இந்த ஒரு பொருளை கலந்து குடித்தால் போதும்

67

வயிற்றின் மூலம் சுவாசம்

இந்த யோகா ஆசனம் ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் மீட்டமைக்கவும் உதவுகிறது.

எப்படி செய்வது

உங்கள் முழங்கால்களை வளைத்து வைத்து, உங்கள் முதுகு தரையில் அழுத்தும்படி படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் விலகி இருக்க வேண்டும். ஆனால் உங்கள் முழங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டும். உங்கள் வலது உள்ளங்கையை எடுத்து உங்கள் வயிற்றில் வைக்கவும். மூச்சை உள்ளிழுக்கவும்; ஆழ்ந்த மூச்சை எடுத்துவிடுங்கள். 

77

 

ஒரு கை பிளாங்

ஒரு சமதளத் தரையில் உங்களது முதுகினை நேராக நிமிர்த்தி வைத்து, கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கையினை மேல் நோக்கி உயர்த்தி  30 விநாடிகள் நிற்க வேண்டும். இதேபோல், மறு பக்கமும் செய்ய வேண்டும். ஒரு கையினை மடக்கி மறு கையினை உயர்த்தும் போது முதுகு கீழே படாமல் இருப்பது அவசியம். இது முதுகுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும். வலிகளைக் குறைக்கும்.

About the Author

AK
Anija Kannan
தில்லி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Fall?: இனி முடி கொட்டவே கொட்டாது.! உங்க கூந்தல் பளபளக்க இந்த விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்.!
Recommended image2
Summer Heart care இதய நோயாளிகள் கவனத்திற்கு... கோடை வெயிலில் ஒளிந்திருக்கும் 'சைலண்ட்' ஆபத்துக்கள்
Recommended image3
Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved