- Home
- உடல்நலம்
- Blood Sugar Alert: பழங்களை அதிகமாக சாப்பிட்டா சுகர் ஏறுமா? டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Blood Sugar Alert: பழங்களை அதிகமாக சாப்பிட்டா சுகர் ஏறுமா? டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Blood Sugar Alert: பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

Blood Sugar Alert
பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த எண்ணம் முழுமையாக சரியானதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஒரே நேரத்தில் அதிக அளவில் பழங்களை சாப்பிடுவது, சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை தற்காலிகமாக உயர்த்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், பழங்களை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்ற கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆரோக்கியமான உணவு
ஜெயப்பூரில் உள்ள சி.கே. பிர்லா மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் டாக்டர் ஹெதாஷ்வி கொண்டாலியா கூறுகிறார், பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவை ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும். இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பழங்கள் உதவுகின்றன. இருப்பினும், அளவோடு சாப்பிடுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பழங்களின் நன்மைகள்
பழங்களில் இயற்கையாகவே ஃப்ராக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ள முழுப் பழங்களை அளவாக சாப்பிடும்போது, இந்த சர்க்கரை மெதுவாக உடலில் உறிஞ்சப்படுவதால் ரத்த சர்க்கரையில் திடீர் உயர்வு ஏற்படுவதில்லை. ஆனால் ஒரே நேரத்தில் அதிகளவு மாம்பழம், நன்கு பழுத்த வாழைப்பழம், திராட்சை போன்ற அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை சாப்பிடுவது சிலருக்கு சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.
முழுப் பழங்கள்
மேலும், பழங்களை ஜூஸ் அல்லது ஸ்மூத்தியாக அருந்தும்போது, அவற்றில் இருக்கும் நார்ச்சத்து குறைவதால் சர்க்கரை வேகமாக உடலில் கலக்கும் வாய்ப்பு. இதனால் அதிக கலோரி உட்கொள்ளல், உடல் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்கள் உருவாகலாம். முழுப் பழங்களை சாப்பிடுவது இந்த அபாயத்தை குறைக்க உதவும்.
டாக்டர் ஆலோசனை
எனவே, பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சரியான அளவில், முழுப் பழமாகவே சாப்பிடுவது சிறந்த தேர்வாகும். குறிப்பாக சர்க்கரை நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.

