MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Tulsi Vastu: துளசி செடி வச்சிருக்கீங்களா? இந்த 3 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க! குடும்பத்துக்கே ஆகாதாம்!

Tulsi Vastu: துளசி செடி வச்சிருக்கீங்களா? இந்த 3 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க! குடும்பத்துக்கே ஆகாதாம்!

Tulsi Vastu: இப்போது பலர் மொட்டை மாடி, பால்கனியில் துளசி வளர்க்கிறார்கள். வீட்டில் சந்தோஷம், செழிப்புக்காக நாம் வைக்கும் துளசி செடியே, சில தவறுகளால் வாஸ்து தோஷத்துக்கு காரணமாகிவிடலாம். அது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 27 2026, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
துளசி செடியை சுற்றி சுத்தமாக இருக்க வேண்டும்
Image Credit : AI

துளசி செடியை சுற்றி சுத்தமாக இருக்க வேண்டும்

துளசி செடியை லட்சுமி தேவியின் அம்சமாக கருதுகிறோம். மொட்டை மாடியில் தூசி, காய்ந்த இலைகள், பறவை எச்சங்கள் அதிகமாக இருக்கும். துளசி செடியைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்தமான இடம், நேர்மறை ஆற்றலை எதிர்மறையாக மாற்றி, வீட்டில் வறுமைக்கும் மனக்கஷ்டத்துக்கும் வழிவகுக்கும்.

தவறான திசையில் துளசியை வைக்க கூடாது

வாஸ்துவில் திசைகள் மிக முக்கியம். துளசி செடியை எப்போதும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில்தான் வைக்க வேண்டும். மொட்டை மாடியில் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்தால், அது உங்கள் நிதி வளர்ச்சிக்குத் தடையாக அமைந்து, வீட்டில் பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
துளசி மாடத்தின் வடிவமும், துணையாக வளர்க்க வேண்டிய செடிகளும்
Image Credit : Instagram

துளசி மாடத்தின் வடிவமும், துணையாக வளர்க்க வேண்டிய செடிகளும்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மொட்டை மாடி அல்லது பால்கனியில் துளசி செடியை வைக்கும் போது சதுர வடிவிலான தொட்டி அல்லது மாடத்தைப் பயன்படுத்துவது வீட்டில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும். மொட்டை மாடியில் துளசி செடியை மட்டும் தனியாக வைக்காமல், அதனுடன் தொட்டியில் ஒரு சிறிய நெல்லி செடியையோ (நெல்லியை விஷ்ணுவின் வடிவமாக கருதுவர்) அல்லது அருகம்புல்லையோ சேர்த்து வளர்ப்பது கூடுதல் பலனைத் தரும். இது லட்சுமி மற்றும் நாராயணரின் அருளை ஒன்றாகப் பெற்றுத் தந்து, வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாட்டை நீக்கும் என்பது புதிய ஆன்மீக விதியாகும்.

34
துளசி செடியை எப்போதும் கவனிக்க வேண்டும்
Image Credit : AI Image

துளசி செடியை எப்போதும் கவனிக்க வேண்டும்

மொட்டை மாடியில் செடியை வைத்துவிட்டு தினமும் தண்ணீர் ஊற்றாமல் இருப்பது பாவம். அதிக வெயில், முறையான பராமரிப்பு இல்லாததால் துளசி செடி காய்ந்துவிடும். காய்ந்த துளசி செடி, வீட்டுத் தலைவரின் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் நேரடியாக பாதிக்கும். செடியை சரியாக கவனிக்க முடியாது என்பவர்கள், அதை வளர்க்காமல் இருப்பது நல்லது.

44
இலைகளைப் பறிக்கும் முறையும், தவிர்க்க வேண்டிய நாட்களும்
Image Credit : AI Image

இலைகளைப் பறிக்கும் முறையும், தவிர்க்க வேண்டிய நாட்களும்

துளசி செடியில் இருந்து இலைகளைப் பறிப்பதற்கும் சில முக்கிய விதிகள் உள்ளன. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் துளசி இலைகளைப் பறிக்கவே கூடாது; இது வீட்டில் தோஷத்தை உண்டாக்கும். அதேபோல், நகங்களால் கிள்ளாமல் விரல் நுனிகளால் மட்டுமே மென்மையாகப் பறிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருக்கும் துளசி செடி ஒருவேளை முற்றிலும் காய்ந்து போனால், அதை குப்பையில் தூக்கி எறியாமல், அருகில் உள்ள நீர்நிலைகளிலோ அல்லது நதிக்கரையிலோ போடுவதுதான் வீட்டிற்கு நல்லது.

துளசி செடி வளர்க்கும்போது இதை செய்யுங்கள்

மொட்டை மாடியில் துளசி செடி வளர்த்தால், அதை ஒரு உயரமான ஸ்டாண்ட் மீது வையுங்கள். இதனால் செடி நேரடியாக தரையைத் தொடாது. அதிக வெயில் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாக்க, ஒரு கூரைக்குக் கீழே செடியை வையுங்கள். மாலையில் தவறாமல் விளக்கேற்றுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
துளசி வேர் வாஸ்து குறிப்புகள்
துளசியின் முகப் பயன்கள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Recommended image2
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Related Stories
Recommended image1
Tulsi Plant Care: துளசி செடி வாடுதா? இந்த வேப்பிலை 'மேஜிக்' ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!
Recommended image2
Tulsi Plant: ஞாயிற்று கிழமைகளில் துளசி செடியை மறந்தும்கூட தொடாதீங்க.. குடும்பத்துக்கே ஆகாதாம்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved