தீராத நெஞ்சு எரிச்சல்.. உடனே தீர்க்க உதவும் 4 எளிய வீட்டு வைத்தியம் இதோ..!!
நீங்கள் அமிலத்தன்மைக்கு ஆளாக நேரிடும் மற்றும் உங்கள் மார்பில் எரியும் உணர்வு, வீக்கம், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளை அடிக்கடி அனுபவித்தால், ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் பரிந்துரைக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.
அதிகப்படியான காஃபின் கொண்ட பானங்களை உட்கொள்வது, சாப்பிட்ட உடனேயே படுப்பது அல்லது அதிக காரமான உணவை உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் சிறிய உணவை உண்பது ஒரு அளவிற்கு உதவக்கூடும். அந்த வகையில், நீங்கள் நெஞ்சு எரிச்சலால் அவதிபடுகிறீர்கள் என்றால், இந்த எளிய வீட்டு வைத்தியங்களையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
பெருஞ்சீரகம் தண்ணீர்: வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை போட்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: நிரந்தரமா அசிடிட்டி பிரச்சனை போகணுமா? ஒரு கிராம்பு போதும்.. இப்படி யூஸ் பண்ணுங்க!
வெல்லம்: இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரண்டும் உள்ளது. பொட்டாசியம் PH சமநிலையை பராமரிக்க சிறந்தது. மறுபுறம், உங்கள் செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய மெக்னீசியம் தேவைப்படுகிறது. எனவே நெஞ்செரிச்சல் ஏற்படும் சமயத்தில் ஒரு சிறிய துண்டு சாப்பிடுவது நல்லது.
கருஞ்சீரகம்: நீங்கள் சீரகத்தை மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
இதையும் படிங்க: உடற்பயிற்சிக்குப் பின் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறதா?...குறைக்க வழிகள் என்ன?
ஓமம் (அஜ்வைன்): இது நெஞ்செரிச்சல் வாயுத்தொல்லை மற்றும் செரிமானத்திற்கு சிறந்தது. அதனால் இதை ஒரு பயனுள்ள அமில எதிர்ப்பு முகவர் என்று கூறுவர். கடைகளில் இது 'ஓமம் வாட்டர்' என்று பாட்டில்களில் விற்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D