- Home
- உடல்நலம்
- ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு இந்த '4'விதைகளை கண்டிப்பா கொடுங்க; புத்திசாலியாக வளருவாங்க!
ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு இந்த '4'விதைகளை கண்டிப்பா கொடுங்க; புத்திசாலியாக வளருவாங்க!
Seeds For Kids : பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சில விதைகளை கொடுத்தால் அவர்களின் முளை நிச்சயமாக கூர்மையாக மாறும். இது என்னவென்று பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்கூலுக்கு போகும் குழந்தைக்கு இந்த '4'விதைகளை கண்டிப்பா கொடுங்க; புத்திசாலியாக வளருவாங்க!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். குழந்தைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால் அவர்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சில உணவுகள் குழந்தைகளின் மூளையும் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இதற்கு குழந்தைகளுக்கு சில விதைகளை சாப்பிட கொடுக்க வேண்டும். அந்த விதைகளில் இருக்கும் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிங்கள், குழந்தையின் மூளையை கூர்மையாக உதவுகிறது. கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். இப்போது அது என்னென்ன விதைகள் என்று எங்கு பார்க்கலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதையில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளன. இதுதவிர வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவையும் அடங்கியுள்ளது. மேலும் ஆக்ஸிஜேற்றிகளும் நிறைந்துள்ளன. உங்கள் குழந்தையின் மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இதை உங்கள் குழந்தைக்கு அப்படியே சாப்பிட கொடுக்கலாம் அல்லது சாலட் மற்றும் பிற காய்கறிகளுடன் சேர்த்து கொடுக்கலாம்.
சியா விதைகள்:
நார்ச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. மேலும் இதை குழந்தைகளின் உணவில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த சியா விதையை உங்கள் குழந்தைக்கு தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து கொடுக்கலாம். இப்படி கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
இதையும் படிங்க: உங்க குழந்தைக்கு இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட கொடுங்க.. இனி மடமடனு சூப்பரா வெயிட் போடும்!
பூசணி விதைகள்:
பூசணி விதையானது ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாகும். இதில் நல்ல அளவு மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் நிறைந்துள்ளன. இவை உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் துத்தநாகம் நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை மேம்படுத்தும். எனவே உங்கள் குழந்தைக்கு இந்த விதையை கொடுப்பதன் மூலம் அவர்களது அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளையை கூர்மையாக்கும்.
இதையும் படிங்க: உங்க குழந்தை புத்திசாலியாக வளர.. இந்த உணவுகளை கண்டிப்பா கொடுங்க!!
ஆளி விதைகள்:
ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது மனநிலை மற்றும் அறிவாற்றலை கட்டுப்படுத்தும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே இதை உங்கள் குழந்தைக்கு கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக இந்த விதையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், அது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் அவர்களது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.