- Home
- உடல்நலம்
- உறவுமுறை
- heartbreak: உங்கள் "எக்ஸ்" ன் ஞாபகம் அடிக்கடி வருதா? இதற்கான உளவியல் காரணம் இது தானாம்
heartbreak: உங்கள் "எக்ஸ்" ன் ஞாபகம் அடிக்கடி வருதா? இதற்கான உளவியல் காரணம் இது தானாம்
உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியை பிரிந்த பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்களை மறக்க முடியாமல், அவர்களை பற்றிய நினைவுகள் அடிக்கடி வருவதற்காக என்ன காரணம் என உளவியல் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா?

காதல் முறிவும் மூளையின் செயல்பாடும்:
ஒருவரைக் காதலிக்கும்போது, நம் மனதில் பெரிய மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியைத் தரும் டோபமைன் எனும் ரசாயனம் அதிகமாகச் சுரக்கிறது. இது ஒருவித மகிழ்ச்சியையும், துணையைத் தேடும் ஆர்வத்தையும் உருவாக்குகிறது. ஆனால், துணையைப் பிரிந்ததும், மூளை மீண்டும் அந்த இன்பத்தை அடையத் துடிக்கிறது. இது போதைப் பழக்கத்திற்கு அடிமையானது போல, மீண்டும் அந்த நபருடன் சேர வேண்டும் என்ற தீவிரமான ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிர்ச்சிப் பிணைப்பு:
சில உறவுகளில் சண்டையும் சமாதானமும் மாறி மாறி வரும். இப்படிப்பட்ட சமயத்துல, நம் மனதில் மகிழ்ச்சியும், அதே சமயத்தில் ஒருவித அழுத்தமும் மாறி மாறி உண்டாகும். இந்தத் தொடர்ச்சியான ஏற்றத்தாழ்ங்கள், நம் மனசுல ஒருவிதமான பிணைப்பை உண்டாக்கிடும். இதைத்தான் "அதிர்ச்சிப் பிணைப்பு"ன்னு சொல்றோம். இந்த உறவு முடிவுக்கு வந்த பிறகும், இந்த பிணைப்பால அந்த நபரை மறக்க முடியாம ரொம்பவே கஷ்டப்படுவோம். இந்த மாதிரி உறவுகள்ல, ஒருநாள் சண்டை வந்தா, அடுத்த நாள் நல்லபடியா சமாதானம் ஆகிடுவோம்ங்கிற நம்பிக்கைலயே நாம இருப்போம். இதுவும் அந்த பிணைப்பை இன்னும் பலப்படுத்தும்.
திடீர் பிரிவு ஏற்படுத்தும் குழப்பம்:
எதிர்பாராத விதமாகப் பிரிவு ஏற்படும்போது, மூளைக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். உறவில் இருந்தபோது நாம் பழகிய விஷயங்கள், வழக்கமான செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தும் திடீரென முடிவுக்கு வரும்போது, மூளை அதை ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது. இது ஒருவித பாதுகாப்பற்ற உணர்வையும், பழைய நினைவுகளையே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கத் தூண்டும்.
கடந்த கால நினைவுகளின் ஏக்கம்:
பிரிவுக்குப் பிறகு, பலர் உறவில் இருந்த நல்ல தருணங்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பார்கள். இது ஒருவகையில் தனிமையிலிருந்தும், வலியிலிருந்தும் தப்பிக்க மனம் எடுக்கும் முயற்சி. இந்த நல்ல நினைவுகள் தற்காலிகமாக ஆறுதல் அளித்தாலும், முன்னாள் துணையை மறப்பது கடினமாகிவிடும். ஏனெனில், நல்ல நினைவுகள் மட்டுமே மனதில் நிறைந்து, உறவின் கசப்பான விஷயங்கள் எல்லாம் மறைஞ்சு போயிடும்.
முடிக்கப்படாத விஷயங்கள்:
பிரிவுக்கான உண்மையான காரணம் சரியாகத் தெரியாதபோது அல்லது சில கேள்விகளுக்கு விடை கிடைக்காதபோது, மனம் ஒருவித குழப்பத்திலேயே இருக்கும். "ஏன் இப்படி நடந்தது?", "நான் ஏதாவது தவறு செய்தேனா?" போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் வந்து, அந்த நபரைப் பற்றிய சிந்தனைகளிலிருந்து வெளிவர முடியாமல் செய்கின்றன. இந்த முடிக்கப்படாத கேள்விகள் நம் மூளையை அந்த உறவையே சுற்றிச் சுற்றி யோசிக்க வைக்கின்றன.
பாதியில் நின்ற நினைவுகள்:
பாதியில் நின்ற அல்லது முடிக்கப்படாத விஷயங்களை, முடிந்த விஷயங்களை விட நாம் எளிதாக நினைவில் வைத்திருப்போம். இது ஒரு உளவியல் உண்மை. ஒரு உறவு திடீரென முடிவுக்கு வரும்போது, அது மனதில் ஒரு "முடிக்கப்படாத வேலை" போல பதிந்துவிடுகிறது. இதனால், அந்த உறவையும், அதனுடன் தொடர்புடைய நபர்களையும் மறப்பது கடினமாகிறது. மூளை அந்த "முடிக்கப்படாத வேலையை" முடிக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாக இது இருக்கலாம்.
ஆதரவின் இழப்பு:
ஒரு உறவில் இருக்கும்போது, துணை ஒரு நல்ல நண்பரா, நம்பகமானவரா, நமக்கு ஆதரவா இருந்திருப்பார். பிரிவு ஏற்படும்போது, நமக்குக் கிடைச்ச அந்த முக்கிய ஆதரவை நாம இழக்குறோம். இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாம நாம தவிக்கும்போது, மனம் பழைய நினைவுகளையே தேடிப் போகும். இது அந்த நபரைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டும், கூடவே தனிமையையும் அதிகப்படுத்தும். இனிமே யார்கிட்ட பேசுறது, யார்கிட்ட கஷ்டங்களைச் சொல்றதுங்கிற உணர்வு ரொம்பவே பாதிக்கும்.