கன்னித்தன்மைல இவ்ளோ விஷயங்கள் இருக்கா!! ஷாக் ஆகாம படிங்க!!
கன்னித்தன்மை குறித்து சொல்லப்படும் கட்டுக்கதைகளையும் உண்மையும் குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில் போதிய பாலியல் கல்வி இல்லாத காரணத்தால், கன்னித்தன்மையைச் சுற்றி பல தவறான புரிதலும், கருத்துகளும் காணப்படுகிறது. பெண்கள் முதல்முறையாக உடலுறவு கொள்ளும் போது ரத்தம் வருவதையும், வலி ஏற்படுவதையும் பலர் கன்னித்தன்மை என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களுக்கும் வலி ஏற்படுவதில்லை. சிலருக்கு முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப்போக்கும் ஏற்படாது. இதற்கு உடல் உழைப்பு, உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம்.
சுயஇன்பம், டம்பான்களின் பயன்பாடு பெண்களின் கன்னித்தன்மையை நீக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீங்கள் சுய இன்பம் செய்வதால் கன்னித்தன்மை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் முதல் முறையாக உடலுறவு கொண்டீர்களா? இல்லையா? என்பதை நிபுணர்களால் தான் தீர்மானிக்க முடியும். இதற்கென மற்ற வழிமுறைகள் இல்லை.
சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் துணையின் கன்னித்தன்மை குறித்த கவலை இருக்கிறது. ஆனால் உறவில் நேர்மையாக இருப்பது முக்கியம், கன்னித்தன்மை சான்றல்ல. உங்கள் கன்னித்திரை உங்கள் கன்னித்தன்மையை வெளிப்படுத்தாது அல்லது நீங்கள் முன்பு உடலுறவு கொண்டீர்களா இல்லையா என்பதை உங்கள் துணையால் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் உங்களுடைய முந்தைய உறவின் பாலியல் வரலாற்றைப் பற்றி தற்போதைய துணையுடன் பேசுவது ஒருவருக்கொருவர் அதிக நெருக்கத்தையும், நம்பிக்கையையும் வளர்க்கும்.
நீங்கள் கன்னித்தன்மை இழந்துவிட்டால் எப்போதும் உடலுறவு வைத்து கொள்ள தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. உண்மையிலேயே விரும்பும் போது மட்டும் உடலுறவு வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை முறை உடலுறவு வைத்தாலும், அதை முழுமையாக அனுபவிக்க, சரியாக சிந்தித்து முடிவு செய்யுங்கள். உடலுறவு என்பது 2 ஆன்மாவையும், அவர்களின் உடலையும் இணைக்கும் செயல்பாடு. அதை வெறுமனே ஒரு செயலை போல செய்யாதீர்கள்.