MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Biscuits: மக்களே உஷார்.. ஆரோக்கியத்தை கெடுக்கும் டாப் 5 மோசமான பிஸ்கட்கள் என்னென்ன தெரியுமா?

Biscuits: மக்களே உஷார்.. ஆரோக்கியத்தை கெடுக்கும் டாப் 5 மோசமான பிஸ்கட்கள் என்னென்ன தெரியுமா?

Biscuits: குளுக்கோஸ், கிரீம், பட்டர் போன்ற பிஸ்கட்களில் அதிக சர்க்கரை மற்றும் மைதா இருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய், மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 15 2026, 07:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
டாப் 5 மோசமான பிஸ்கட்கள்
Image Credit : FREEPIK

டாப் 5 மோசமான பிஸ்கட்கள்

பிஸ்கெட் என்பது சிறியவர் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் என்பது வெறும் சிற்றுண்டி மட்டுமல்ல, அது தேநீருடன் சேர்ந்து சாப்பிடுகின்றனர். எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும், பிஸ்கெட்களில் சர்க்கரை மற்றும் மைதா அதிகம் இருப்பதால், அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பிஸ்கெட் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. ஆகையால் எந்த் விதமான பிஸ்கெட்டுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
குளுக்கோஸ் பிஸ்கட்கள்
Image Credit : Getty

குளுக்கோஸ் பிஸ்கட்கள்

நிறைய பேர் குளுக்கோஸ் பிஸ்கட் சாப்பிட்டால் உடம்பிற்கு எனர்ஜி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதில், மைதாவும் சர்க்கரையும் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து குறைந்துவிடும். தற்காலிகமாக எனர்ஜி கிடைத்தாலும் உடனே சோர்வாகிவிடுவார்கள். இதை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
Weight loss: 15 நாட்களில் உங்கள் எடையை குறைக்கலாம்.! எளிய உடற்பயிற்சிகள், ஏற்ற சாப்பாடு இவைதான்.!
Related image2
சொன்னா நம்பமாட்டீங்க.. வெந்தய தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா!
36
கிரீம் பிஸ்கட்கள்
Image Credit : FREEPIK

கிரீம் பிஸ்கட்கள்

குழந்தைகளும் இளைஞர்களும் கிரீம் பிஸ்கெட்களை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். நடுவில் இருக்கின்ற கிரீம் சுவையாக இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள், நிறங்கள் இருக்கும். இதை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும், பல் சொத்தை ஏற்படும். அதுமட்டுமல்ல உடம்பில் கொழுப்பு அதிகளவில் சேரும். குறிப்பாக சிறிய குழந்தைகள் இதை சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

46
பட்டர் பிஸ்கட்கள்
Image Credit : FREEPIK

பட்டர் பிஸ்கட்கள்

பட்டர் பிஸ்கட்கள் சுவையாக இருப்பதால் நிறைய பேர் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இதில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ், டிரான்ஸ் ஃபேட்ஸ் அதிகம் உள்ளது. இது இதயம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உடம்பில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தி, இதய நோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். இதை தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

56
கிட்ஸ் பிஸ்கட்கள்
Image Credit : istockphoto

கிட்ஸ் பிஸ்கட்கள்

கிட்ஸ் பிஸ்கட்களை குழந்தைங்களுக்காகவே மார்க்கெட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இது ஆரோக்கியமானது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதில் சர்க்கரை, உப்பு, செயற்கை வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. பேக்கேஜிங் வெளியில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ஊட்டச்சத்து மதிப்பு ரொம்ப குறைவு. இதை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவதை விட, இயற்கையான உணவுகளை கொடுப்பது நல்லது.

66
சாக்லேட் பிஸ்கட்கள்
Image Credit : Pixabay

சாக்லேட் பிஸ்கட்கள்

சாக்லேட் பிஸ்கட்கள் உடம்பிற்கு அவ்வளவு நல்லது இல்லை. சாக்லேட் ஃபிளேவர் என்ற பெயரில் அதிக சர்க்கரையும் கொழுப்பும் இருக்கும். செயற்கை சுவையூட்டிகள், கோகோ பொருட்கள் அதிகமாக இருப்பதால் உடம்பில் கலோரிகள் அதிகமாகும். இதை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை கூடும். குழந்தைகள் இதை அதிகளவில் சாப்பிடும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
குழந்தைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amla Benefits: தினமும் ஒரு நெல்லிக்காய்... ஏன் சாப்பிடணும் தெரியுமா? இதோ காரணங்கள்!
Recommended image2
Magnesium Foods: நல்லா தூக்கம் வரணுமா? நைட்ல இந்த மெக்னீசியம் உணவுகளை சாப்பிடுங்க!
Recommended image3
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 9 சிறந்த பழங்கள்!
Related Stories
Recommended image1
Weight loss: 15 நாட்களில் உங்கள் எடையை குறைக்கலாம்.! எளிய உடற்பயிற்சிகள், ஏற்ற சாப்பாடு இவைதான்.!
Recommended image2
சொன்னா நம்பமாட்டீங்க.. வெந்தய தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved