MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Mutton : நான் வெஜ் பிரியர்களே... மட்டன் சாப்பிட்ட உடன் தப்பி தவறிகூட இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம்..!

Mutton : நான் வெஜ் பிரியர்களே... மட்டன் சாப்பிட்ட உடன் தப்பி தவறிகூட இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம்..!

Foods You Must Avoid After Eating Mutton : நான் வெஜ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இறைச்சிகளில் மட்டன் முதன்மையானது. மட்டன் சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 29 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Foods You Must Avoid After Eating Mutton
Image Credit : chatgpt

Foods You Must Avoid After Eating Mutton

நான்-வெஜ்னா யாருக்குத்தான் பிடிக்காது? அதுலயும் மட்டன் ரொம்ப விரும்பி சாப்பிடுறவங்க நிறைய பேர் இருக்காங்க. சிலர் வாரத்துல மூணு, நாலு நாள் கூட அசைவம் சாப்பிடுவாங்க. மட்டன் உடம்புக்கு நல்லதுதான் என்றாலும், அதைச் சரியான முறையில சாப்பிடலைனா, அதுவே நமக்கு பிரச்னையைக் கொண்டு வந்துடும்னு நிபுணர்கள் சொல்றாங்க. ஆமாங்க, மட்டன் சாப்பிட்டதுக்கு அப்புறம் சில உணவுகளைச் சாப்பிட்டா, அது நம்ம உடம்புல சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அது என்னென்ன உணவுகள்னு பார்க்கலாம் வாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மட்டன் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்
Image Credit : AMINA CREATIONS

மட்டன் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நம்ம ஆரோக்கியம் நாம சாப்பிடற உணவைப் பொறுத்துதான் இருக்கு. அதனால, என்ன சாப்பிடுறோம், அதைச் சரியான முறையில சாப்பிடுறோமா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். குறிப்பா, சிக்கன், மட்டன் மாதிரியான அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது நாம செய்யுற சின்ன சின்ன தவறுகளால செரிமானப் பிரச்சனை, வயிறு எரிச்சல், சருமப் பிரச்சனைகள் எல்லாம் வரலாம். மட்டன்ல புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகமா இருக்கு. அதனால, அது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கும். இதனாலதான், மட்டன் சாப்பிட்ட உடனே சில உணவுகளைச் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றாங்க. அப்படி சாப்பிட்டா, அஜீரணம் மாதிரியான பிரச்சனைகள் வரலாம்.

Related Articles

Related image1
Mutton Kadai Recipe : பன்னீர் கடாய் தெரியும். அதென்ன ''மட்டன் கடாய்''! வாங்க செய்யலாம்!
Related image2
Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
35
பால், தயிர் அல்லது மோர்
Image Credit : Asianet News

பால், தயிர் அல்லது மோர்

சிலர் அசைவம் சாப்பிட்ட உடனே பால், தயிர் அல்லது மோர் குடிப்பாங்க. ஆனா, இது உடம்புக்கு நல்லது இல்லைனு நிபுணர்கள் சொல்றாங்க. அசைவம் சாப்பிட்டதுக்கு அப்புறம் இதையெல்லாம் குடிச்சா, செரிமானம் மெதுவாகி, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, சருமத்துல தடிப்பு மாதிரியான பிரச்சனைகள் வரலாம்னு நிபுணர்கள் எச்சரிக்கிறாங்க.

45
தேன்
Image Credit : pinterest

தேன்

மட்டன் சாப்பிட்டதுக்கு அப்புறம் தேன் சாப்பிடறது உடம்புக்கு கெடுதல்னு நிபுணர்கள் சொல்றாங்க. தேன் உடம்புல சூட்டை அதிகரிக்கிற குணம் கொண்டது. இதை மட்டனோட சேர்த்து சாப்பிடும்போது, உடம்புல சூடு இன்னும் அதிகமாகும். இதனால நெஞ்செரிச்சல், அசௌகரியம் எல்லாம் ஏற்படலாம். அதனால, மட்டன் சாப்பிட்டதும் தேன் சாப்பிடுற பழக்கம் உங்களுக்கு இருந்தா, உடனே அதை நிறுத்திடுங்க.

55
இனிப்புகள்
Image Credit : pinterest

இனிப்புகள்

அதுமட்டுமில்ல, மட்டன் சாப்பிட்டதுக்கு அப்புறம் வாழைப்பழம், ஸ்வீட்ஸ் சாப்பிடறதும் கூடாது. நாம சாப்பிட்ட மட்டன் ஜீரணமாக நேரம் எடுக்கும்ங்கிறதால, இதையெல்லாம் உடனே சாப்பிட்டா, வயிற்றுப் பிரச்சனைகள் வந்து, உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்னு நிபுணர்கள் சொல்றாங்க. அதனால, மட்டன் சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு, அப்புறமா உங்களுக்குப் பிடிச்சதைச் சாப்பிடலாம்.

ராத்திரி நேரத்துல மட்டன் சாப்பிடறது அவ்வளவு நல்லது இல்லைனு மருத்துவர்களே சொல்றாங்க. மட்டன் சாப்பிட்ட உடனே சரியான அளவுல தண்ணீர் குடிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு பாரமா இருந்தா, இஞ்சி அல்லது வெந்தய கஷாயம் குடிச்சா சரியாகிடும்னு நிபுணர்கள் சொல்றாங்க.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆட்டுக்கறி குழம்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chicken: சிக்கன் வித் ஸ்கின்னுடன் வாங்குறீங்களா? அதனால இவ்ளோ நல்லது இருக்குது தெரியுமா?
Recommended image2
Boiled Egg: வேகவெச்ச முட்டையா, ஆம்லெட்டா? காலை டிபனுக்கு எது பெஸ்ட் தெரியுமா?
Recommended image3
Egg: ஒரே ஒரு முட்டை.. தினமும் சாப்பிட்டா கிடைக்கும் 7 நன்மைகள்
Related Stories
Recommended image1
Mutton Kadai Recipe : பன்னீர் கடாய் தெரியும். அதென்ன ''மட்டன் கடாய்''! வாங்க செய்யலாம்!
Recommended image2
Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved