மோர்.. இளநீர் உடல் சூட்டை தணிக்கும்.. ஆனா கோடையில் இந்த விஷயங்களும் பண்ணனும்!!
summer health tips: கோடைகால வெப்பம் தணிக்கவும், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கவும் சில பயனுள்ள டிப்ஸ்...
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், கோடை வெப்பத்தின் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு பருவ காலங்களிலும் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தை மாற்றி அமைப்பது உடல் நலனை பேணு உதவும். உதாரணமாக, கோடை காலங்களில் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கொய்யாப்பழத்தை அதிகம் உண்ண அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் கோடைக்கு ஏற்ற கனியாக கொய்யா கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்தாலே கோடை வெயிலும் கூடவே வரும். இந்நிலையில் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் பராமரிக்க வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரையில் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த கோடைக்கு ஏற்ற கொய்யா, தர்பூசணி, மாம்பழம், கிர்ணி, நுங்கு ஆகியவை உண்ண வேண்டும்.
பழங்களை நேரடியாக உண்பதும் உடலுக்கு நல்லது. அதை விரும்பாதவர்கள் தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களை பழச்சாறாகவும் தயாரித்து அருந்தலாம். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு இருமல், சளி ஆகிய தொந்தரவு இருந்தால் பழங்களை தவிர்த்து விட்டு கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?
கோடை காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் சிட்ரஸ் பழங்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன. எலுமிச்சை பழச்சாறை அருந்துவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். அதேபோல ஆரஞ்சு பழமும் நம் உடலை பராமரிக்க உதவும். கோடைகாலங்களில் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும் இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. அதிக வெயில் கொளுத்தும் இந்து சமயத்தில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த நம்முடைய நாக்கு சுவைக்க துடிக்கும். ஆனாலும் குளிர்பானங்களை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஐஸ் வாட்டர் உடலுக்கு ஏற்றது அல்ல. மண்பானை நீர், பதனீர், இளநீர் போன்றவை எடுத்துக் கொள்ளலாம். கோடைகாலங்களில் இந்த விஷயங்களை பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த சரும நோய்களும், பிற பிரச்சனைகளும் ஏற்படாது.
இதையும் படிங்க: தினமும் ஒரு வெள்ளரி இவ்வளவு நன்மைகளா! ஆனா வெள்ளரிகாய் சாப்பிடும்போது இதை மட்டும் சாப்பிடாதீங்க!