MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?

பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?

பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கான முழு பின்னணியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : maria pani
Published : Apr 26 2023, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பானமாக கருதப்படுகிறது. இதில் சுவை என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் கோடைகாலங்களில் தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது ஏன் தெரியுமா? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். ஆனால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதில் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இந்த கோடைகாலத்தில் குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க போதுமானதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் தாய்ப்பால் போதும் என்பது தான் பதிலாக இருக்கிறது. 

34

தண்ணீர் ஏன் கொடுக்கக்கூடாது? 

பிறந்து சில மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் தண்ணீரை செரிமானம் செய்ய தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். அவர்களின் வளர்ச்சியடையாத சிறுநீரகங்கள் ஊட்டச்சத்து இழப்பினால் எளிதில் பாதிக்கப்படும். பிறந்த குழந்தையின் வயிற்றில் உண்மையில் 1 முதல் 2 டீஸ்பூன்கள் அல்லது 5 முதல் 10 மி.லிக்கு மட்டுமே இடம் இருக்கும். குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது தேவையில்லாத பொருள்களால் அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு சமம். இதனால் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் கலோரிகளுக்கு இடமளிக்காது. குறிப்பாக தண்ணீரில் எந்த சத்துக்களும் இல்லை. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கும். 

இதையும் படிங்க: காலையில் ஈறுகளில் ரத்தம் கசியுதா? பல் துலக்கும்போது இதை கவனிச்சு பாருங்க!!

44

குழந்தையின் 6 மாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அரை கப் தண்ணீர் தேவைப்படுகிறது. சில குழந்தைகள் அதிகமாக விரும்பினாலும் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக எதுவும் தேவைப்படாது. உங்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதற்கு முன், உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு அவர் சொல்லும் அளவுகளில் தண்ணீர் கொடுங்கள். 

இதையும் படிங்க: தினமும் தூங்கும் முன்பு இதை செய்யுங்கள்.! உங்களுக்கு அதிர்ஷ்டமும், நிம்மதியும் பெருகும்..

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image2
Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!
Recommended image3
சோடா புட்டி கண்ணாடிக்கு 'டாடா'! கண் பார்வை கூர்மையாக 5 புதுமையான வழிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved