வெயிலின் தாக்கத்தில் உடலையும் பாதுகாத்து.. எடையும் குறைக்க உதவும் அற்புத கோடைகால பானங்கள்..!
கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைத்து, அதே நேரம் உடல் எடையை கணிசமாக குறைக்க உதவும் பானங்களின் முழுவிவரம்...
வெந்தய நீர் கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதோடு உடல் எடையும் குறைக்க உதவும். காலையில் இதை அருந்துவதால் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச ஆற்றல் கிடைக்கிறது. எப்படி தயார் செய்ய வேண்டும் தெரியுமா? கொஞ்சம் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். காலையில் அந்த வெந்தய விதைகளை நீக்கி, வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடியுங்கள். வயிறு சுத்தமாகி உடல் பொலிவுறும்.
குளிர்காலத்தில் 'டீ' எப்படி உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறதோ அப்படி தான் கோடைக்காலத்தில் மோர் உள்ளது. சிலர் உணவிற்கும் எடுத்து கொண்ட பிறகு ஒரு பெரிய டம்ளர் மோர் குடிப்பார்கள். ஏனெனில் செரிமானத்திற்கு உதவுகிறது. நம் குடல் இயக்கத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான பாக்டீரியாவை மோர் கொண்டுள்ளது. மோரை அப்படியே கூட குடிக்கலாம். கொஞ்சம் உப்பு, மசாலாப் பொருள்களைச் சேர்க்கலாம். சிலர் ஐஸ் மோர், இனிப்பு மோர் குடிக்க விரும்புகிறார்கள். தயிரை விட மோர் நல்லது. எடை இழப்புக்கு உதவும்.
வெள்ளரிக்காய் கோடைக்கு ஏற்ற கொடை என்று சொல்லலாம். இதை உண்ணும்போது பற்கள் சுத்தமாகும். வெள்ளரி தண்ணீரைப் போலவே, எலுமிச்சை, புதினா ஆகியவை கலந்த பானங்கள் கூட நம்முடைய காலையைத் தொடங்க சிறந்த வழியாகும். எலுமிச்சை, புதினா ஆகிய இரண்டும் அவற்றின் புத்துணர்ச்சியூட்டும் தன்மைக்காக உண்ணப்படுகின்றன. இவற்றை நீரில் போட்டு, அந்த நீரை எடுத்து கொள்வதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
Image: Getty Images
நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைப்பதில் ஆரஞ்சு நீருக்கு நல்ல பங்குண்டு. இதில் வைட்டமின் சி உள்ளது. ஆகவே வளர்சிதை மாற்றத்தை அதிகமாக்கும். ஒரு பாட்டில் தண்ணீரில் ஆரஞ்சு துண்டுகளை சேர்த்து கொள்ளுங்கள். அந்த சாறு இறங்கிய நீரை அருந்தினால் இந்த கோடை புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமையும்.
இதையும் படிங்க: தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..
ஆப்பிள், இலவங்கப்பட்டை இரண்டும் நல்ல சத்துக்கள் கொண்டவை. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இலவங்கப்பட்டை உங்கள் வளர்சிதை மாற்றத்தை இயற்கையாக அதிகரிக்கும் மசாலாவாகும். தண்ணீரில் ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து அதனை அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஒரு நபரை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். பசி எடுக்காது.
இந்த பானங்களை வீட்டில் தயார் செய்து அருந்தி கோடையின் வெம்மையிலிருந்து தப்பித்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!